எதிர்பாராமல் கிடைத்த வெற்றி: எஸ்.ஆர்.பி.பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

வெற்றி பெறுவோம் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்காத எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திற்கு ஷாக் கான விஷயம்அவர் வெற்றி பெற்றது தான். தொண்டாமுத்தூர் தொகுதிக்குள் அவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும், அதையும் மீறிவென்றவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.

இறுதி நேரத்தில் கூட அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூண்டோடு தமிழ் மாநில காங்கிரசே காலை வாரி விட்டது.பெரும் படையே சிதம்பரத்தின் பின்னால் சென்று விட, மனம் நொந்து போய் இருந்தார் எஸ்.ஆர்.பி.

இதனால், ஓட்டு எண்ணும் மையத்திற்குள் கூட வேண்டா வெறுப்பாக நுழைந்துவருக்கு அங்கு அதிர்ச்சி ஆனந்தம்காத்திருந்தது. ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையிலும் வெற்றி முகம் தெரிய, அவர் முகம் பளிச்சிட்டது.தன்னையே நம்பமுடியாத எஸ்.ஆர்.பி., வெற்றியை உடனே இனிப்பாகக் கொண்டாட நினைத்தார்.

அதுவும் உடனேயே வெற்றி பெற்றதும் ஒரு ஜீப்பை கடைக்கு அனுப்பி கூடை கூடையாக லட்டுக்களை அள்ளி வரச்சொல்லி விட்டார். பிறகு என்ன, ஓட்டு எண்ணும் மையத்திலேயே அவ்வளவு லட்டும் காலி.

இங்கு அவரது கட்சியா அவரைக் காப்பாற்றியது? என அதிமுக தொண்டர்கள் ஆசுவாசப்பட்டுக் கொண்டனர்.எஸ்.ஆர்.பி, ஆபிசுக்கு முன்பும் அதிமுகவினரே பட்டாசுகளைக் கொளுத்தி தீர்த்துக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+