Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ.முதல்வராக பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayalalithaஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக திங்கள்கிழமை மாலை6.16 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்தது.

பதவியேற்பு நிகழ்ச்சி முதலில் நீராரும் கடலொடுத்த இறைவணக்கப் பாடலுடன் தொடங்கியது.

பதவியேற்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில், ஜெயலலிதா என்னும் நான் கடவுள் பெயரில் தமிழகமுதல்வராகப் பதவியேற்கிறேன். சட்டப்படி, தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுக் கொள்கிறேன் என்றார்.

அவருக்கு கவர்னர் பாத்திமா பீவி பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.

அமைச்சர்கள் பதவியேற்பு:

ஜெயலலிதாவுடன், அமைச்சர்களாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அய்யாறுவாண்டையார், தம்பிதுரை, பொன்னையன், உப்பிலியாபுரம் ஆர்.சரோஜா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர்பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட ஆர்.சரோஜா, ஜெயலலிதா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் மூப்பனார், ஜெயந்தி நடராஜன், வீரமணி, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்மலைச்சாமி, சசிகலா ஆகியோர் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்ச்சி மாலை 6.31 மணிக்கு முடிந்தது.

கவர்னர் வாழ்த்து:

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டதும் கவர்னர் பாத்திமா பீவி பூங்கொத்து கொடுத்துஜெயலலிதாவை வாழ்த்தினார். தலைமைச் செயலாளர் முத்துசாமியும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் தொண்டர்கள்:

ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டதும் அதிமுக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியைக்கொண்டாடினர். ராஜ்பவனுக்கு வெளியே பெருந்திரளாக அதிமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் பட்டாசு கொளுத்தி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

ஜெ.ஒரு முன்னுரை:

ஜெயலலிதா 1982 ம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1983 ம் ஆண்டு முதன்முதலாகதேர்தல் பிரச்சாரம் செய்தார்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாளே ஒருவர் மாநில முதல்வராகப் பதவி ஏற்றுக் கொள்வது இந்தியவரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு நிகழ்ச்சியின் போது ஜெயலலிதா பச்சைக் கலரில் (ஆலிவ் க்ரீன்) புடவை அணிந்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+