அரசு அலுவலகங்களில் ஜெ.புகைப்படம் வைப்பதில் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளில் முன்னாள் முதல்வர்கருணாநிதியின் படங்கள் அகற்றப்பட்டுவிட்டன.

பொதுவாக தமிழ்நாடு முழுவதும் அப்போதைய முதல்வர்களின் படங்கள் சுவர்களில் மாட்டி வைக்கப்படும்.

இந்த போட்டோக்கள்தான் அரசு விழாக்களின் அழைப்பிதழ்களையும் அலங்கரிக்கும். அதே போல் மஞ்சள்துண்டு அணிந்திருந்த கருணாநிதியின் படங்கள் அகற்றப்பட்டு விட்டன.

கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அரசு அலுவலகங்களில் பச்சை நிற கோட்அணிந்த அவரது படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் புகைப்படங்களில் ஜெயலலிதா காதில் வைரத்தோடுஅணிந்தவாறு, நெற்றியில் மெல்லிய கீற்றாய் உள்ள குங்குமத்துடன் மெல்லிய புன்னகையுடன் காட்சியளிப்பார்.

1996 ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுவிட்டன.இதையடுத்து மஞ்சள் துண்டு அணிந்த கருணாநிதியின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.

தற்போது அதிமுக கூட்டணி அருதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிமைத்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ளஅனைத்து அரசு அலுவலகங்களிலும், விருந்தினர் மாளிகைகளிலும் கருணாநிதியின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுவிட்டன.

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜெயலலிதாவின் நகைகளைப் போலீஸார் கைப்பற்றியதால் இனிமேல்நகைகளே அணிய மாட்டேன் என்று ஜெயலலிதா சபதம் செய்திருந்தார்.

அதன்படி, இப்போது ஓவர்கோட், நகைகள் எதுவும் அணியாமல் மிகவும் எளிமையாகக் காணப்படுகிறார்ஜெயலலிதா. இதனால் அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் பழைய புகைப்படத்தை வைப்பதா அல்லது புதியபுகைப்படத்தை வைப்பதா என்று அரசு அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+