19-ம் தேதி புதிய சட்டசபை கூடுகிறது
சென்னை:
தமிழக புதிய சட்டசபை மே 19-ம் தேதி கூடவுள்ளது. அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டஎம்.எல்.ஏக்கள் பதவியேற்கவுள்ளனர்.
தமிழகத்தின் 11-வது சட்டசபையின் பதவிக்காலம் மே 21-ம் தேதி முடிவடைகிறது. அதற்குள் அடுத்த சட்டசபையின்அதாவது 12-வது சட்டசபை உருவாக்கப்பட வேண்டும்.
12-வது சட்டசபையில் 133 இடங்களுடன் தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைத்துள்ளது. அதன்கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை ஆளுங்கட்சியாக இருந்த திமுக இப்போதுவெறும் 28 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியாகியுள்ளது.
இந்த நிலையில், புதிய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வரும் 19ம் தேதிபதவியேற்கவுள்ளனர். இதற்கு வசதியாக 12-வது சட்டசபையை நிர்மாணிப்பதற்கான உத்தரவை ஆளுநர் பாத்திமாபீவி பிறப்பித்துள்ளார். அரசு அறிவிப்பில் இது வெளியாகியுள்ளது.
இதையடுத்து 19-ம் தேதி புதிய சட்டசபை கூடுகிறது. அன்று மாலை 3 மணிக்கு புதிய எம்.எல்.ஏ.க்கள்உறுப்பினர்களாக பதவியேற்கவுள்ளனர். அவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். அதற்கு முன்னதாக தற்காலி சபாநாயகருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
தற்காலிக சபாநாயகராக கருணாநிதி, அன்பழகன், அப்துல் லத்தீப், ஆற்காடு வீராசாமி, சோ.பாலகிருஷ்ணன்ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது. இவர்கள்தான் தற்போதைய உறுப்பினர்களில்மூத்தவர்கள்.
சட்டசபைக் கூட்டம் கூடுவதற்கு முன்பு அமைச்சரவையை விரிவுபடுத்த முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.இதற்கான ஆலோசனையில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
19-ம் தேதி காலை அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில்ஆளுநர் பாத்திமா பீவி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications