இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள புஷ் விருப்பம்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர் நோக்கியிருப்பதாக கூறியுள்ளார்.
சென்ற மாதம் கிளின்டனுக்கு பின் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜார்ஜ் வில்லியம் புஷ்ஷைஇந்தியாவிற்கு வருமாறு பிரதமர் வாஜ்பாய் அழைப்பு விடுத்திருந்தார். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.
பிரதமர் புஷ்ஷை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்த கடிதத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் அமெரிக்கா சென்றிருந்த போது புஷ்ஷை சந்தித்து கொடுத்தார்.
புஷ் தனது ஒப்புதல் கடிதத்தை அமெரிக்காவின் துணை செயலாளர் ரிச்சரட் அர்மிடேஜ் மூலம் வாஜ்பாயுக்குஅனுப்பி வைத்தார்.
இன்னும் புஷ்ஷின் இந்திய சுற்றுப் பயணத்திற்கான தேதிகள் முடிவு செய்யப்படவில்லை.
ஆசிய மரபுரிமை மாதம் வெள்ளை மாளிகையில் கொண்டாடப்பட்டது தொடர்பாக அமெரிக்காவில் இருக்கும்இரண்டு இந்திய தலைவர்களான ஸ்வதேஷ் சாட்டர்ஜி மற்றும் துர்கா அகர்வால் ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்ததது.
அவர்களிடம் புஷ் கூறுகையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானுக்கும், தென் கொரியாவிற்கும்சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறேன். இந்திய சுற்றுப்பயணத்தை மிக ஆவலுடன் எதிர் நோக்கியருக்கிறேன்.தேதிகள் மட்டும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றார்
இது குறித்து சாட்டர்ஜி பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், அமெரிக்க அதிபர் புஷ் இந்தியா அமெரிக்காவிற்குகம்ப்யூட்டர் வல்லுனர்களை கொடுத்தற்காகவும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அமெரிக்காவின்பொருளாரத்திற்கு ஆற்றிய சேவையையும் பெரிதும் பாராட்டினார் என்றார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications