இலங்கையில் கைதான 39 தமிழக மீனவர்களை மீட்க முயற்சி
கொழும்பு:
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 39 தமிழக மீனவர்களுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.
தூத்துக்குடி, ஜகதாபட்டினம், ராமநாதபுரம் கடற்பகுதிகளில் மீன் பிடித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 39 மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 31 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். 8 பேர் சென்ற மாதம் 18ம் தேதி கைது செயய்யப்பட்டனர். 8 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையையும் பறிமுதல் செய்தனர்.
தற்போது அவர்களுக்கு உதவ இந்திய அரசு முன்வந்துள்ளது. இந்திய தூதரகத்தின் 2 மூத்த அதிகாரிகள் யாழ்பாணம் சிறையில் இருக்கும் மீனவர்களின் நிலையை கேட்டறிந்தனர். அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக அவர்களிடம் உறுதியளித்தனர்.
சிறை அதிகாரிகளிடம் மீனவர்களுக்கு எந்த விதமான துன்புறுத்தலும் கொடுக்காமல் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
இலங்கை கடற்பகுதியில் பல விதமான மீன்கள் கிடைப்பதால் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடிப்பதால், இலங்கை கடற்பகுதிக்குள் அத்து மீறி நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டுவதும் வழக்கமாக நடப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications