ஜெ. வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி விலகல்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கைவிசாரித்து வந்த போலீஸ் எஸ்.பி. நல்லம நாயுடு திடீரென விசாரணையிலிருந்து தான் விலகிக் கொள்வதாககூறியுள்ளார்.
ஜெயலலிதா மீது திமுக ஆட்சிக்காலத்தில் 4 வழக்குகள் தொடரப்பட்டன. அனைத்து வழக்குகளும் தனிநீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தன.
இதில் கலர் டிவி வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு விட்டார். கொடைக்கானல்ஹோட்டல் வழக்கில் 1 ஆண்டு தண்டனையும், டான்சி நில பேர வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனையும்விதிக்கப்பட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு மற்றும் நிலக்கரி பேர ஊழல் விசாரணை நடந்துவருகிறது.
வருமானத்துக்கு மீறிய வகையில் ரூ. 66 கோடி அளவுக்கு சொத்து சேர்த்த வழக்கை எஸ்.பி. நல்லம நாயுடுவிசாரித்து வந்தார். இந்த வழக்கில், தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில், விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நல்லம நாயுடு கூறியுள்ளார். அவரதுவிலகலுக்கு ஆட்சி மாற்றமே காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தனது விலகலுக்கு உடல் நிலைசரியில்லாமையே காரணம் என்று நல்லமநாயுடு கூறியுள்ளார்.
ஏற்கனவே ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஜெயலலிதா மீதான வழக்குகளில் ஆஜராகி வந்த அரசு வக்கீல்கள்சோமசுந்தரம், வெங்கடரமணன் ஆகியோர் விலகி விட்டனர். தற்போது நல்லம நாயுடுவும் விலகி விட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications