3 போலீஸ் அதிகாரிகளை மாற்றினார் முதல்வர் ஜெயலலிதா
சென்னை:
ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக தமிழகத்தின் 3 உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் கொடுத்துள்ளது அதிமுக அரசு.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
திமுகவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் சென்னை கமிஷனர் பி. காளிமுத்துவுக்கு விழுந்தது முதல் அடி. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு, அவர் சமூகநீதி கூடுதல் காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆயுதப்படை ஐ.ஜி.யாக இருந்த கே.முத்துக்கருப்பன் சென்னை நகரின் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்பு அதிரடிப்படை மற்றும் குடியுரிமைப் பொருள் வழங்கல் துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஏ.எக்ஸ்.அலெக்ஸாண்டர், மாநில போலீஸ் அகாடமியின் திட்ட இயக்குநர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
சென்னை நகர துணை கமிஷனராக இருந்த எம்.பாலச்சந்திரனும் மாற்றப்படுகிறார். ஆனால், எங்கு அவர் மாற்றப்படுகிறார் என்பது பற்றித் தனியாக அறிவிக்கப்படும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications