வெயிலிலிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி?
சென்னை:
கடுமையான வெயில் கொடுமையிலிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி என்பது குறித்து வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை டாக்டர் அறிவுரை கூறியுள்ளார்.
தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 100 டிகிரி வரை வெயில் அடித்து வருகிறது. சென்னையில்கடுமையான வெயில் அடிக்கிறது. இந்த கடுமையான வெயிலில் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வரும்வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்ப்பது குறித்து சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர் ஜார்ஜ் சாண்டி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:
* குழந்தைகளால் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது கடினம். கோடை காலத்தில் வெப்ப நிலை அதிகரித்தால் குழந்தைகளின் உடலிலும் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு வெப்பக் காய்ச்சல் வரும் வாய்ப்புள்ளது.
* வெப்ப காய்ச்சலைக் கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள்: உடல் அசதி, வாந்தி, தலை சுற்றுதல், மயக்கம், ரத்த அழுத்த குறைவு போன்றவையே அந்த அறிகுறிகள். இந்த அறிகுறிகளைக் கண்டுபிடித்து சரியான சிகிச்சை தராவிட்டால் சன் ஸ்டிரோக் எனப்படும் வெப்ப அதிர்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.
* சன் ஸ்டிரோக் வந்தால் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பில் போய் முடியும் அபாயம் உண்டு.
* வெப்பகாய்ச்சலைத் தவிர்க்கும் வழிமுறைகள்: கடுமையான வெயிலில் போய் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும், கடும் வேலை, நீச்சல் அடிப்பது ஆகியவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். வெயிலில் நீண்ட தூரம் நடப்பது மற்றும் பிரயாணம் ஆகியவற்றைத் தள்ளிப் போட வேண்டும். பழச்சாறு, இளநீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும், மெல்லிய பருத்தி துணிகளையே அணிய வேண்டும், அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
* வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications