வெயிலுக்கு இதமாக ...
வாட்டர் பாக்கெட்
சென்னையில் சர்வசாதரணமாக வாட்டர் பாக்கெட் புழக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் சிறுவர்,சிறுமியர் கையில் வாளி, அதில் ஐஸ் கட்டிகள், அதற்குள் சிறு வாட்டர் பாக்கெட்டுகளைப் போட்டுக் கொண்டுவிற்றுக் கொண்டு இருப்பர். அதன் விலை ஒரு ரூபாய்தான். வாங்கி, உடைத்து வாயில் போட்டுக் கொண்டால் நாவறட்சி போச்சு!.
மின்சார ரயில்களிலும் இந்த வாட்டர் பாக்கெட் விற்பனை அதிகமாக உள்ளது. பஸ்சை விட ரயிலில்தான் வெயிலின்வெம்மை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த வாட்டர் பாக்கெட் விற்பனை சூப்பர் சானிக் வேகத்தில் உள்ளது.சென்னையிலேயே இந்த வாட்டர் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. சாதாரண தண்ணீராகஇல்லாமல் மினரல் வாட்டராக இருப்பதால் ஆரோக்கியத்திற்கும் கேடு இல்லை.
கையில் தண்ணீர் பாட்டிலைத் தூக்கிக் கொண்டு போகாமல், அவ்வப்போது வாங்கி வாயில் ஊற்றிக் கொள்ளும்வசதியை யார்தான் வேண்டாம் என்பார்கள்?
தர்பூஸ், வெள்ளரி
தர்பூஸ் பழங்கள் மற்றும் வெள்ளரிக் காய் விற்பனையும் சென்னையில் சூடு பிடித்துள்ளது. சாலையோரங்களில்தர்பூஸ் மலைகளைப் பார்த்திருக்கலாம். நல்ல சுவையுடன், தண்ணீர்ச் சத்து நிறைந்த தர்பூஸை வாங்கி சாப்பிட்டால்,வெயிலில் உலர்ந்த நாக்குக்கு கொஞ்சம் உயிர் வரும்.
உலர்ந்து, சுருங்கிக் கிடக்கும் குடல் கொஞ்சம் எழுந்து நிற்கும். தர்பூஸுக்கு சமமமான சத்தைக் கொண்டதுவெள்ளரி. பிற ஊர்களைப் போல் அல்லாது குட்டை வெள்ளரிக்குப் பதில் இங்கு புடலங்காய் சைசில் நீளமானவெள்ளரிக் காய்கள் கிடைக்கும். நல்ல சுவையாகவும், தண்ணீர்ச் சத்து உள்ளதாகவும் வெள்ளரிக் காய்கள் உள்ளன.
ஐஸ் மோர், லஸ்ஸி
கையில் காசு கொஞ்சம் கம்மியாக இருந்தால் ஐஸ் மோர் சாப்பிடலாம். பிளாட்பாரங்கள் பூராவும் ஐஸ் மோர்கடைகளைப் பார்க்கலாம். விலை அதிகமில்லை ரூ. 2.50 தான். ஜில்லென்று, ஒரு டம்ளர் மோர் வாங்கிச்சாப்பிட்டால், உடலுக்கு ஜிலுஜிலுவென்று இருக்கும்.
மோர் உடலக்கும் நல்லது. மோரைப் போலவே லஸ்ஸியும் உடலுக்கு நல்லது. மோருக்கு சீனியரான தயிரைக்கடைந்து ஜீனியைக் கலந்து தயாரிக்கப்படும் லஸ்ஸி உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். லஸ்ஸி விலை கொஞ்சம்அதிகம். குறைந்தது ரூ. 6லிருந்து 10 வரை இருக்கும். ஆனால் ரூ. 15 கொடுத்து ஜூஸ் சாப்பிடயோசிப்பவர்களுக்கு இது சீப் அன்ட் பெஸ்ட் குளிர்பானம்.
பழச்சாறுகள்.
விதவிதமான பழச்சாறுக் கடைகள் எங்கு பார்த்தாலும் உள்ளன. ரூ. 10 லிருந்து ரூ. 20 வரை இந்த பழச்சாறுகளின்விலை உள்ளது.
சப்போட்டா, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, மாம்பழம் என விதவிதமான பழச்சாறுகள். வெயிலுக்கு மட்டுமல்லாது,உடலுக்கும் நல்லது. இந்தக் கடைகளுக்கு இப்போது நல்ல வருமானம். மழைக்குப் பயந்து பள்ளிக்குள்நுழையாதவர்கள் கூட வெயிலுக்குப் பயந்து இங்கு ஒதுங்கி வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications