கவர்னர் உரையை புறக்கணிக்க திமுக முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மே 25 ம் தேதி தமிழகத்தின் புதிய சட்டசபையில் ஆளுநர் பாத்திமா பீவி உரையாற்றும் கூட்டத்தை புறக்கணிக்கதிமுக முடிவு செய்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை முதல்வராகப் பதவியேற்பதற்கு ஆளுநர் பாத்திமா பீவி அழைத்ததைஎதிர்த்து இந்தக் கூட்டத்தை புறக்கணிக்க திமுக முடிவெடுத்துள்ளதாகத் கூறப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை முதலமைச்சராக்கக் கூடாது.ஆனால் இந்த விதிமுறையை கவர்னர் மீறி விட்டார் என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது.

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவடைந்தபின் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா மீது விசாரணை நடத்தக் கோரியவர் இதேகவர்னர்தான். ஆனால் இதே கவர்னர் இப்போது ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை முதல்வராகப்பதவியேற்க அழைத்துள்ளார்.

ஜெயலலிதாவை முதல்வராகப் பொறுப்பேற்கும்படி, கவர்னர் அழைத்தது இந்திய அரசியலமைப்புச் சட்டவிதிமுறைகளுக்குப் புறம்பான செயலாகும். கவர்னரின் செயலை எதிர்த்து திமுக கோர்ட்டுக்குச் செல்லாது. ஆனால்25 ம் தேதி நடக்கும் சட்டசபைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார். திமுக பொருளாளர் ஆற்காடுவீராசாமி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருப்பார்.

மேலும் நான் இனிமேல் முழுக்க, முழுக்க கட்சிப்பணிகளில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன். ஆனால்அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய மாட்டேன்.

நான் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். அதனால் தேவைப்பட்டால் சட்டசபைவிவாதங்களில் கலந்து கொள்வேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+