ஐ.ஏ.எஸ். தேர்வு: 4 தமிழக மாணவர்கள் சாதனை
சென்னை:
சென்னை அண்ணாநகரில் தமிழக அரசால் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி மையத்தில் படித்த 4 பேர்2000ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சாத்தூரைச் சேர்ந்த டாக்டர் பி. உமாநாத் (26), சிவில் சர்வீஸஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 17ஆவதுஇடத்தைப் பிடித்துள்ளார். இவர் தற்போது திருவள்ளூர் மாவட்டம் பீரக்குப்பத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில்டாக்டராகப் பணியாற்றி வருகிறார்.
மதுரையைச் சேர்ந்த டாக்டர் ஆர். மீனாட்சிசுந்தரம் (27), அகில இந்திய அளவில் 20 ஆவது இடத்தைப்பெற்றுள்ளார். கால்நடை மருத்துவரான இவர், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆராய்ச்சியாளராகஇருந்து வருகிறார்.
ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஆர். செல்வம் (29), 74 ஆவது இடத்தில் இருக்கிறார். வேளாண்மையில் முதுகலைமுடித்துள்ள இவர், ஏற்கனவே ஐ.ஆர்.எஸ். எழுதி வெற்றி பெற்றுள்ளார். தற்போது பரோடாவில் பயிற்சி பெற்றுவருகிறார்.
தென்காசியில் ஆர்.டி.ஓ.-வாகப் பணிபுரிந்து வரும் டாக்டர் அன்பழகன், சிவில் சர்வீஸஸ் தேர்வில் 79ஆவது ரேங்க்வாங்கியுள்ளார். இவர் கால்நடை மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
ஐ.பி.எஸ்.: இதே மையத்தில் படித்த மேலும் 2 பேர் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த எம்.எஸ்ஸி. பட்டதாரியான பி.எஸ். முபாரக் (27), சிவில்சர்வீஸஸ் தேர்வில் 198ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுவழக்கறிஞர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
சிவில் சர்வீஸஸ் தேர்வில் 238ஆவது ரேங்க் பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த கிளமண்ட் ரமேஷ் குமார் (27).பி.டெக். படித்துள்ள இவர், ஐ.எப்.எஸ். பணியில் சேர வேண்டும் என்பதற்காக அசோக் லேலண்டு கம்பெனிவேலையை உதறியவர்.
ஐ.ஆர்.எஸ்.:இவர்கள் தவிர, இம்மையத்தில் படித்த மேலும் 17 பேர் ஐ.ஆர்.எஸ். தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர்.இவர்கள் இந்திய வருவாய்த்துறை பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications