தற்காலிக சபாநாயகராகிறார் அப்துல் லத்தீப்
சென்னை:
தமிழக சட்டசபையின் தற்காலி சபாநாயகராக இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் அப்துல் லத்தீப்பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை 24ம் தேதி கூடுகிறது. அன்று புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்கவுள்ளனர். அவர்களுக்குதற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். தற்காலிக சபாநாயகர் பதவிக்கு பலருடைய பெயர்அடிபடுகிறது. இருப்பினும் அதிமுக கூட்டணியில் உள்ள இந்திய தேசியக் கட்சித் தலைவர் அப்துல் லத்தீபுக்குஅதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
சபையின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் அப்துல் லத்தீப். எனவே அவரே தற்காலிக சபாநாயகராக இருந்து புதியஎம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 196 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி இரண்டாவதுஇடத்தைப் பெற்றுள்ளது. தற்போது சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து எந்தக் கட்சிக்கு கிடைக்கும்என்ற பேச்சு எழுந்துள்ளது.
அதிமுகவுக்கு அடுத்து அதிக இடங்களைப் பெற்றுள்ள கட்சியாக திமுக திகழ்கிறது. இக்கட்சி 28 தொகுதிகளில்வெற்றி பெற்றுள்ளது. எனவே இக்கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும்.
திமுக தரப்பில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்குக் கிக்ைகும் என்பதில் குழப்பம் எழுந்துள்ளது. முதல்வராகஇருந்த கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. மேலும்ஜெயலலிதாவை எதிர்கொள்வதிலும் அவர் விருப்பமில்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே அவருக்கு அடுத்து கட்சியில் மூத்த தலைவரான ஆற்காடு வீராசாமி அல்லது அன்பழகன் ஆகியோரில்ஒருவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கலாம் என்று தெரிகிறது. திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்வெள்ளிக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் சட்டசபை திமுக கட்சித் தலைவர் தேர்வுசெய்யப்படுவார். அவரே எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பார்.












Click it and Unblock the Notifications