ரயில்வே நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்கள் வெளியேற்றம்
சென்னை:
சென்னை வேளச்சேரியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களை போலீஸார்அப்புறப்படுத்தினர்.
சென்னை வேளச்சேரி அருகே மாடி ரயில் போக்குவரத்துக்கான பாலம் கட்டப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் முதல்வேளச்சேரி வரையிலான மாடி ரயிலுக்கான பாலம் இது. முடிவுறும் நிலையில் இந்த கட்டுமானப் பணிகள்உள்ளன.
ரயில் பாலம் கட்டப்பட்டு வரும் இடத்திற்கு அருகே ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலம் உள்ளது. வெறும்நிலமாக கிடக்கும் இப்பகுதியில் குடிசைவாசிகள் மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு அரசு இடம் ஒதுக்கித் தரப்போவதாக வியாழக்கிழமை செய்தி பரவியது.
இதையடுத்து உதயம் நகர், திருவள்ளுவர் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர்அந்தப் பகுதிக்கு படையெடுத்து வந்தனர்.
கையில் கட்டைகளுடன் வந்த அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான இடத்தை முற்றுகையிட்டு கட்டைகளை ஊன்றிரிசர்வ் செய்து கொள்ளத் தொடங்கினர். பரந்து விரிந்த ரயில்வே நிலத்தில் திடீரென நூற்றுக்கணக்கான மக்கள்கட்டைகளை ஊன்றி நிலத்தைப் பிடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அப்பகுதிக்கு போலீஸார் விரைந்து வந்தனர். ரயில்வே நிலம் யாருக்கும்ஒதுக்கித் தரப்பட மாட்டாது என்றும், பட்டா தரப் போவதாக வெளியான செய்தி தவறானது, வெறும் வதந்தி என்றுவிளக்கி ஆக்கிரமிப்பு செய்திருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
கைக்குக் கிடைத்தது வாய்க்கு கிடைக்காமல் போன வருத்தத்தோடு மக்கள் புலம்பியவாறே கொண்டு வந்தகட்டைகளுடன் தங்களது ஒரிஜினல் குடிசைகளுக்குத் திரும்பினர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications