மாஜி அமைச்சர்களின் ஊழல்களை கிளறுகிறது அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இருந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சேர்த்துள்ள சொத்து பற்றிய விவரங்கள்மற்றும் ஊழல் விவரங்களை சேகரிக்க ரகசிய போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

தி.மு.க. முன்ளாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் சொத்து மற்றும் அவர்கள் செய்த ஊழல் குறித்தவிவரங்களைத் தொகுதி வாரியாகக் கண்டுபிடித்து கூறுமாறு எல்லா மாவட்டங்களில் உள்ள ரகசிய போலீசாருக்கும்உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. போலீசார் இது குறித்த பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆரம்பத்தில் எவ்வளவு சொத்து வைத்திருந்தார்கள்? தற்போது எவ்வளவுசொத்து வைத்திருக்கிறார்கள்?

மனைவி, மகன், மகள், உறவினர்கள், பினாமி பெயர்களில் சொத்துக்கள் உள்ளனவா? பினாமிகள் இருந்தால்அவர்கள் யார் யார்?

அவர்களின் ஆரம்பகால சொத்தும், தற்போது உள்ள சொத்தும் என்னென்ன?

சொந்தமாக, கார், லாரி, பேருந்துகள் போன்றவை முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களால்வாங்கப்பட்டுள்ளதா? அவை எந்த ஊர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன? அரசு இடங்களை ஆக்கிரமித்துவளைத்துப் போட்டுள்ளார்களா?

இவை எல்லாவற்றையும் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு ரகசிய போலீசாருக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ரகசிய போலீசார் இந்த விவரங்களை அனுப்பி வைப்பார்கள். இந்த விவரங்கள்லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+