பாண்டி.: மீண்டும் முதல்வரானார் சண்முகம்
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வராக தற்போதைய முதல்வர் ப.சண்முகம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாண்டிச்சேரியில் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, அதிமுக மற்றும் தமாகா கட்சிகளின்ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியமைக்க அதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது. அமைச்சரவையில் தமாகாவும் சேரவுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. தற்போதைய முதல்வர் சண்முகம், மாநில காங்கிரஸ்தலைவர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் மற்றும் அமைச்சர் ரங்கசாமி ஆகியோருக்கிடையேமுதல்வர் பதவியைப் பிடிக்க போட்டோ போட்டி நடந்தது.
இதையடுத்து, முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கஎம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முடிவு செய்தனர்.
இந்நிலையில் சோனியாவின் முடிவு சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போதைய முதல்வர் சண்முகத்தையே மீண்டும் முதல்வராக்க ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து சட்டசபை காங்கிரஸ் தலைவராக சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சனிக்கிழமை நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் குலாம் நபி ஆசாத்,மோதிலால் வோரா ஆகியோர் சிறப்புப் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications