ஏழைக் குழந்தைகளுக்கு உதவுகிறது ஸ்வீட் நிறுவனம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் உள்ள ஏழைகளுக்கு இனிப்பான ஒரு செய்தியை அறிவித்துள்ளது ஒருஸ்வீட் நிறுவனம்.
சமையல் தொழில் செய்வோர், வீட்டில் இட்லி சுட்டு விற்பனை செய்து வரும் மகளிர்,பத்துப் பாத்திரம் தேய்த்து பிழைப்பு நடத்தி வரும் மகளிர், ஆதரவற்ற பெண்கள்ஆகியோரின் குழந்தைகள் 101 பேருக்கு உதவ கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம்முன் வந்துள்ளது.
நிறுவனரின் முதலமாண்டு நினைவு நாளான மே.19ம் தேதி இத்திட்டத்தை அதன்நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது தவிர, சமையல் தொழில் செய்து மிகவும் ஏழ்மையில் உள்ள ஆதவற்றபெண்களுக்கு உதவவும் இந்த ஸ்வீட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தென்னிந்திய அளவில் உள்ள இந்த நிறுவனத்தின் அனைத்துக் கிளைகளிலும் இதற்கானவிண்ணப்பங்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications