என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?... நிருபர்களிடம் ஜெ. வருத்தம்
சென்னை:
மற்ற தலைவர்கள் பேட்டிகளின் போது அமைதியாக இருக்கும் நீங்கள் என்னிடம்மட்டும் ஏன் ஏடாகூடமாகக் கேள்வி கேட்கிறீர்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதாநிருபர்களிடம் வருத்தம் தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை நடந்தது. அதன் பின் அமைச்சர்களுக்கஇலாகாக்கள், அமைச்சரவை கூட்ட முடிவு ஆகியவை குறித்து செய்தியாளர்களுக்குபேட்டியளிக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதற்காகவே காத்திருந்த நிருபர்கள், உடனே போட்டி போட்டுக்கொண்டு ஓடினார்கள்.
ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரிய அறையில் பேட்டியளிக்குமாறு கேட்டுக் கொண்டீர்கள். ஆனால் தலைமைச்செயலகத்தில் பெரிய அறை எதுவும் கிடையாது. அதனால் பெரிய அறை எதிலும்பேட்டியளிக்க முடியாது. அறைகளைப் புதுப்பிக்கவும் முடியாது.
நான் பேட்டியளிக்கும் போதுதான் நீங்கள் போட்டி போட்டுக் கொண்டு,முண்டியடித்தபடி கேள்வி கேட்கிறீர்கள். மற்ற தலைவர்களை இது போல் கேள்விகேட்பதில்லை. அமைதியாக இருக்கிறீர்கள்.
இதை நான் டிவியில் பார்த்திருக்கிறேன். இது மிகவும் தவறு என சற்று கோபத்துடனும்,வருத்ததுடனும் கூறினார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications