மதுரையில் குடம் தண்ணீர் ரூ. 3.50

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறது. அங்கு குடம் தண்ணீர் ரூ.3.50க்கு விற்கப்படுகிறது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சித்திரை திருவிழாவின்போது அழகர் ஆற்றில் இறங்குவதற்கு சிலநாட்களுக்கு முன்பு மழை பெய்தது. அதன் பிறகு மழை இல்லை. இதனால் கடுமையான குடிநீர்ப் பஞ்சம்நிலவுகிறது.

வெயிலும் அதிகமாக இருப்பதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. புதூர், சர்வேயர் காலனி,மேலமடை, கோமதிபுரம், கே.கே.நகர், அண்ணாநகர், தாசில்தார் நகர், அனுப்பானடி, சுப்ரமணியபுரம், டிவிஎஸ்நகர், எல்லீஸ் நகர், விராட்டிபத்து, பரவை, கூடல் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இப்பகுதிகளில் வசிப்பவர்கள் காசு கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறார்கள். தனியார்லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீரை ரூ. 1.50 முதல் 3.50 வரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

புறநகர்ப் பகுதிகளிலும் கூட குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. பசுமலை, அவனியாபுரம், திருப்பரங்குன்றம்,சமய நல்லூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+