கொப்பரை தேங்காய் ஊழல்: கிலியில் தி.மு.கவினர்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

தி.மு.க. ஆட்சியின் போது கொப்பரைத் தேங்காய் கொள் முதலில் நடந்த ஊழல் விவகாரம் தற்போது ஆட்சி புரிந்துவரும் அ.தி.மு.க. அரசால் வெளிக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற தி.மு.க. அரசு தங்களுக்கு முன் அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை கண்டுபிடித்து, அதில்ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் அவரதுஅமைச்சரவை சகாக்கள் மீதும் தனி நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

ஜெயலலிதா உட்பட்டவர்கள் மீது நடந்த வழக்கில் அவர்கள் சில வழக்கில் தண்டிக்கப்பட்டனர். சில வழக்கில்விடுவிக்கப்பட்டனர்.

இந்த மாதம் 10ம் தேதி நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டு ம் ஆட்சிஅமைத்துள்ளது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகியுள்ளார்.

ஜெயலலிதா பதவியேற்ற பின் கூறுகையில், யாரையும் பழி வாங்க மாட்டேன். ஆனால் குற்றம் செய்தவர்கள்தண்டிக்கபடுவார்கள் என்றார்.

இந்நிலையில் கடந்த ஆட்சியில் நிகழ்ந்த கொப்பரை தேங்காய் ஊழல் விவகாரம் முதலில் வெளிவரக் கூடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்திய லஞ்ச ஓழிப்புத் துறை போலீசார் பலஆவணங்களை தயார் செய்துள்ளனர்.

அரசின் அனுமதி கிடைத்தவுடன் வழக்கு தொடர அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதை அறிந்த முன்னாள்அமைச்சர்களும், அதிகாரிகளும் அச்சமடைந்துள்ளனர்.

சென்ற ஆட்சியின் போது கொப்பரை தேங்காய் விலை வீழந்தது. இதிலிருந்து விவசாயிகளை காக்க மத்திய அரசுகொப்பரைக்கு குறைந்த விலையை நிர்ணயித்தது.

இதன்படி 1 கிலோ தேங்காய்க்கு ரூ 32 வழங்கப்பட்டது. இது விவசாயிகளுக்கு லாபம். இந்த லாபத்தில் தாங்கள்லாபம் அடைய நினைத்தவர்கள் முறைகேடுகளில் ஈடுபடத் துவங்கினர்.

தேங்காய்களை கூட்டுறவு சங்கங்களுக்கு எடுத்துச் சென்ற விவசாயிகளின் தேங்காய்கள் கூட்டுறவு துறைஅதிகாரிகள் தரக் குறைவானவை என திருப்பி அனுப்பப்பட்டன.

கவலையடைந்த விவசாயிகள் இடைத்தரகர்களாக மொத்த வியாாபாரிகளிடம் கிலோ ஒன்றை ரூ 20க்கு விற்றனர்.இதே தேங்காய் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பேரில் ரூ 32.50 பைசாவுக்கு விற்கப்பட்டது. இதன் மூலம் கிலோஒன்றுக்கு ரூ 12 50 பைசா லாபம் கிடைத்தது.

இந்த முறைகேட்டில் உதவிய அரசியில் பிரமுகர்கள், அதிகாரிகளுக்கு பங்கு கொடுக்கப்பட்டதாக தெரிய வந்துகுற்றச்சாட்டும் கிளம்பியது.

இது குறித்து தி.மு.க அரசிடம் முறையிடப்பட்ட போதும் அதிகாரிகள் தலையீட்டால் நடவடிக்கை எதுவும்எடுக்கப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தென்னை விவசாயிகள் புகார் செய்தனர்.அதனடிப்படையில் அவர்கள் தேங்காய் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடுகளை ரகசியமாக அரசுக்கு அனுப்பிவைத்தனர்.

ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் விசாரணை எதுவும் நடை பெறவில்லை.

இந்நிலையில் தற்போதைய அரசு தி.மு.க. அரசின் ஊழல்களை கிளறி வெளிக் கொண்டு வரும் முயற்சியில்ஈடுபட்டுள்ளது. சென்ற ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட விசாரணை தொடர்பான கோப்புகளையும்தற்போதைய அரசு கேட்டுள்ளது.

கொப்பரை தேங்காய் ஊழல் விவகாரம் தொடர்பாக பல ஆவணங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.அதிலுள்ள தகவல்களின்படி பல அமைச்சர்கள், அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும்தீவிரப்படுத்தப்படும் என தெரிய வருகிறது.

இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டால் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் பிடிபடுவார்கள் என விவசாயிகள்கூறுகின்றனர்.

இந்த விஷயம் தி.மு.க. மற்றும் கோவை மாவட்ட அதிகாரிகள் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+