போராட்டத்தின் பின்னணியில் அரசியல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெய்வேலி அனல் மின் நிலையத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல்இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நெய்வேலி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக விதிப்படி வேலை என்ற நிலையில்போராட்டம் நடத்தி வந்தனர். திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத்தொடங்கியுள்ளனர்.

திமுக சார்பு தொழிற்சங்க அமைப்பான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைநடத்தி வருகிறது. சட்டசபைத் தேர்தல் முடிந்து, புதிய முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற தினத்திலிருந்து இந்தவேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

தொழிலாளர்கள் தரப்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே வேலைநிறுத்தம் குறித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் திடீர் என்று வேலைநிறுத்தம தொடங்கியிருப்பது பல கேள்விகளைஎழுப்பியுள்ளது. மேலும், திமுக சார்பு தொழிற்சங்க அமைப்பு இதில் தொடர்பு கொண்டிருப்பதால், அதிமுக அரசுக்குஎதிரான போராட்டமாக இது இருக்கும் என்று பொதுமக்களிடையே பேச்சு நிலவுகிறது.

ஜெயலலிதா பதவியேற்பின்போது சென்னை முழுவதும் மின்சாரம் தடைபட்டது. ராஜ்பவனில் கூட ஜெனரேட்டர்உதவியுடன்தான் ஜெயலலிதா பதவியேற்றார். திடீரென மின்சாரம் தடைபட்டதற்கு முன்னாள் மின்துறை அமைச்சர்ஆற்காடு வீராசாமி ஆதரவு அதிகாரிகள்தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் நெய்வேலி ஊழியர்கள்போராட்டமே மின் தடங்கலுக்குக் காரணம் என்று பின்னர் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

நெய்வேலி மின் நிலைய நிர்வாகம் மத்திய அரசின் கீழ் வருவதால், தமிழக அரசால் தொழிலாளர்கள்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக எதுவும் பேச முடியாது. நெய்வேலி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்காரணமாக தமிழகம் மட்டுமல்லாது தென் மாநிலங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து தமிழகம் தவிர, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களும் மின்சாரம்பெறுகின்றன. எனவே தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றுதொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி தொழிலாளர்களுடன் பேசுவதற்காக டெல்லியிலிருந்து அதிகாரிகளும் வந்துள்ளனர். தொழிலாளர்பிரதிநிதிகளுடன் அவர்கள் பேச்சு நடத்தி வருகிறார்கள். இருப்பினும் இதுவரை தீர்வு ஏதும் ஏற்படவில்லை.

தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம்காரணமாக தினசரி ரூ.10 கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தி இல்லாத காரணத்தால்தமிழகத்தில் கடுமையான மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. சென்னை மட்டுமல்லாது பிற பகுதிகளிலும்மின்வெட்டு கடுமையாக உள்ளது. சென்னை தலைநகர் என்பதால் அங்கு ஓரளவு மின் விநியோகம் முறையாகஉள்ளது. ஆனால் கிராமங்கள், பிற பகுதிகளில் மிகக் கடுமையான மின்வெட்டு அமலாகியுள்ளது. பெரும்பாலானகிராமங்களில் பகல் நேரங்களில் மின் விநியோகமே இல்லை என்று கூறப்படுகிறது.

நெய்வேலி தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கை, ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதே. பலஆண்டுகளாக இதை நெய்வேலி அனல் மின் கழகம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதால், போராட்டத்தைத்தற்போது கையில் எடுத்திருப்பதாக தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எப்படியிருப்பினும், தொழிலாளர்கள் போராட்டத்திற்கு விரைவில் முடிவு காணப்படாவிட்டால் தென் மாநிலங்களில்பெரும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+