கர்நாடகா-கோவாவில் புயல்
பனாஜி:
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் காரணமாக ஏற்பட்ட புயல் கோவா வழியே 300கிலோமீட்டர் வேகத்தில் வியாழக்கிழமை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
புயல் கர்நாடா - கோவா வழியே கரையைக் கடக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய வானிலைத்துறை இயக்குநர் ஆர்.பாஜ்பாய் கூறியதாவது:
அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் வடக்கு நோக்கி 14. 3 டிகிரியிலும், கிழக்குநோக்கி 71.6 டிகிரியிலும் மையம் கொண்டுள்ளது.
இந்தப் புயல் வியாழக்கிழமை முற்பகல் கர்நாடாகா- கோவா வழியே கரையைக் கடக்கிறது. இதனால்கர்நாடகத்தில் வியாழக்கிழமை ரத்னகிரி, கார்வாரில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடந்தால் வீடுகள், மரங்கள்,மின்கம்பங்கள் ஆகியவற்றுக்கு பலத்த சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவா, கொங்கன், கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடியமழையோ இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
மீனவர்கள் யாரும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு, போதிய அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தீயணைப்பு மற்றும் அவசரநடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்பு கன்ட்ரோல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் கரையைக் கடப்பது பற்றியும், கரையைக் கடந்ததும்ஏற்படும் சேதம் குறித்தும் உடனுக்குடன் தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கன்ட்ரோல் அறைகள்அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
இதுகுறித்து கோவா அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,
புயல் கரையைக் கடக்கும் போது சூறாவளியுடன் கூடிய காற்றும், பலத்த மழையும் பெய்யக் கூடும். இதனால்பொதுமக்கள் அனைவரும், வீட்டு உபயோகப் பொருட்களான மண்ணெண்ணெய், உணவு பொருட்கள்ஆகியவற்றை முன்னதாகவே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. கடலோரப் பகுதிகளில்வாழ்பவர்கள் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications