காஷ்மீரில் சண்டை நிறுத்தம் வாபஸ்
டெல்லி:
காஷ்மீரில் இந்த மாதம் 31 ம் தேதியுடன் முடிவடையவுள்ள சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்வது எனபாதுகாப்பு தொடர்பாக நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் கடந்த நவம்பர் மாதம் ரம்ஜான் நோன்புதொடங்கியதையடுத்து சண்டை நிறுத்தத்தைக் கடைபிடிப்பது என மத்திய அரசு திட்டமிட்டது.
இதையடுத்து சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. அது தொடர்ந்து ஆறு மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன.
இதையடுத்து பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை மாலை வாஜ்பாய்தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டும், காஷ்மீரில் தொடர்ந்துவன்முறைச் சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் அதை வாபஸ் பெற்று விட வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்தபின் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்நிருபர்களிடம் கூறுகையில்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெறுவது என மத்திய அரசு முடிவு செய்கிறது. ஏனெனில்சண்டை நிறுத்தம் அமலில் இருந்தும் கூலிப்படைகளால் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
தீவிரவாத அமைப்புக்களும் சண்டை நிறுத்தத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றன. இதையும் மீறி காஷ்மீரில்அமைதி நிலவி வந்தது.
மத்திய அரசின் தூதரும், திட்டக்கமிஷனின் துணைத் தலைவருமான கே.சி.பந்த் தொடர்ந்து அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த இந்தியா, பாகிஸ்தான் அதிபர் முஷாரபுக்குஅழைப்பு விடுக்கிறது என்றார்.
யு.என்.ஐ.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications