பிஜியில் வாழும் இந்தியத் தொழிலாளர்களுக்கு இங்கிலாந்து உதவுமா?
சுவா:
பிஜியில் நடந்த கலவரம் காரணமாக வீடு மற்றும் உடைமைகளை இழந்த இந்திய மக்களுக்கு இங்கிலாந்து உதவவேண்டும் பிஜித்தீவு முன்னாள் கல்வி அமைச்சர் அகமது அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிஜியில் நடந்த ராணுவ புரட்சி காரணமாக இங்கு வாழும் மக்கள் வீடு,உடைமைகளை இழந்துள்ளனர்.
இதில் இந்தியர்கள் அதிகம் பேர். இவர்களின் நலனிற்காக இங்கிலாந்து நிதியுதவி செய்ய வேண்டும். இந்தியாவைச்சேர்ந்த பல தொழிலாளர்கள் பிஜியில் உள்ள கரும்பு பயிரிடும் நிலங்களில் வேலை செய்கிறார்கள்.
கடந்த மே மாதம் 19 ம் தேதி பிஜியின் கலகக் கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட்டு இந்திய வம்சாவளி பிரதமர்மகேந்திர செளத்ரியை சிறைப்பிடித்தார். இதையடுத்து பிஜியில் கலவரம் மூண்டது.
இதற்கிடையே, 1879 ம் ஆண்டிலிருந்து 1916 ம் ஆண்டு 60, 537 தொழிலாளர்கள் பிஜிக்கு கொண்டு வரப்பட்டனர்.இவர்கள் அனைவரும் பிஜிக்கு வந்து கூலித்தொழில் செய்வதற்கு இங்கிலாந்தில் வாழும் தொழிலாளர்களே பெரியஅளவில் உதவி புரிந்திருக்கிறார்கள்.
இதனால் பிஜியில் வாழும் இந்தியர்களுக்கு இங்கிலாந்து உதவி செய்ய வேண்டும். பிஜியில் வாழும் இந்தியர்கள்மனிதநேயமற்ற முறையில் நடத்தப்பட்டு வருகிறார்கள்.
உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பிஜியில் வாழும் இந்தியத் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுவருகிறார்கள் என்பதற்கு சாட்சியங்கள் உள்ளன.
சிலர் மிருகங்களுக்கு சமமாக கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள். இங்கிலாந்தில் உள்ள தொழிலாளர்கள், இந்தியதொழிலாளர்களை ஏமாற்றி பிஜிக்கு அழைத்து வந்து கூலி வேலை செய்ய வைத்து விட்டனர். இதற்குஇங்கிலாந்துதான் பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தொழிலாளர்களை ஏமாற்றி அழைத்து வந்த இங்கிலாந்துமக்களே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
பிஜியில் உள்ள கரும்புத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் இந்தியத் தொழிலாளர்களால் ஆஸ்திரேலியாமற்றும் நியுசிலாந்தில் உள்ள தொழிற்சாலை அதிபர்கள் அதிக அளவில் பயனடைகிறார்கள்.
ஆனால் பிஜித்தீவில் உள்ள கரும்பு பயிரிடும் நிலங்கள், சர்க்கரை ஆலைகளில் வேலை செய்யும் இந்தியத்தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் கடும் பாதிப்புக்குஉள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் பிஜியில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கைஅதிகமாக உள்ளது. அவர்களது பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன.இவர்களுக்கு இங்கிலாந்துதான் உதவி செய்ய வேண்டும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications