ராஜஸ்தான் ராணுவ ஆயுதக் கிடங்கில் தீ: கோடிக்கணக்கில் சேதம்
ஸ்ரீகங்காநகர் (ராஜஸ்தான்):
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள சூரத்கார் ராணுவ ஆயுதக்கிடங்கில் திடீரென்றுவியாழக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக் கிடங்கு உள்ளது.இந்த ஆயுதக் கிடங்கில் வியாழக்கிழமை நண்பகல் சரியாக 12 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்து இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை. கோடிக்கணக்கான ரூபாய்பெறுமானமுள்ள ஏவுகணைகள், வெடிமருந்துகள், ஆயுதங்கள் ஆகியவை தீக்கிரையாகின என்று மட்டும் தெரியவந்துள்ளது.
பல தீயணைப்பு படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக, இந்த வருடத் தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் சேதமடைந்தன.
இதே போல் கடந்த வருடம் ஏப்ரல் 29 ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் உள்ள ஆயுதக் கிடங்கில் தீ விபத்துஏற்பட்டது. இச்சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதில் 10,000 டன் எடையுள்ள வெடிமருந்துகள்,ஆயுதங்கள் ஆகியவை சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.400 கோடி ஆகும்.
மேலும் கடந்த வருடம் ராஜஸ்தான் மாநிலம் கான்பூரில் உள்ள மூன்று ஆயுதக் கிடங்குகளில் ஏற்பட்ட தீ விபத்தில்ரூ.4 கோடி மதிப்புள்ள வெடிமருந்துப் பொருட்கள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications