கா.காளிமுத்து .. ஒரு நடமாடும் தமிழ்
சென்னை:
தமிழக சட்டசபை சபாநாயகராக டாக்டர் கா.காளிமுத்து வியாழக்கிழமை பதவியேற்கிறார்.
சட்டசபை சபாநாயகராக புதன்கிழமை காளிமுத்து போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் துணைசபாநாயகராக வரகூர் அருணாச்சலம் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருவரும் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். சபாநாயகர் பதவிக்கு வந்துள்ள காளிமுத்துமதுரையைச் சேர்ந்தவர். இருப்பினும் அவரது சொந்த ஊர் சிவகாசிக்கு அருகேயுள்ள ராத்தேவன் பட்டி.
1942-ம் ஆண்டு பிறந்த காளிமுத்துவின் பெற்றோர், காளிமுத்து மற்றும் வெள்ளையம்மாள். தமிழில் எம்.ஏ.,பி.எச்.டி படித்துள்ளார்.
சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளரான காளிமுத்து தமிழின் மீது மாறாத காதல் கொண்டவர். தனது 13வயதிலேயே பேச்சாளராக மாறியவர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாயால் மேடை மணி என்றுபாராட்டப் பெற்றவர்.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இத்தோடு 10 க்கும் மேற்பட்ட புத்தகங்களைஎழுதியுள்ளார்.
1965ம் ஆண்டு இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டார். அப்போது பற்றி எறிந்து கொண்டிருந்த இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அரசியல் சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார். மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை ஜெயில்களில் அடைக்கப்பட்டார்.
1971ம் ஆண்டு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் திமுகவிலிருந்துஎம்.ஜி.ஆர். பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தபோது அதிமுகவில் இணைந்தார்.
1977 மற்றும் 1980 ஆகிய இரு தேர்தல்களிலும் மதுரை திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.84-ல் அவர் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். 1989-ல் சிவகாசி எம்.பி. தொகுதியில்போட்டியிட்டார்.
எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக இருந்த காளிமுத்துவை, கருணாநிதிக்குப் போட்டியாகஅதிமுகவில் பயன்படுத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர். கருணாநிதி ஏதாவது அறிக்கை விட்டால் அதற்குகாளிமுத்துவைக் கொண்டுதான் தமிழால் அடிப்பார் எம்.ஜி.ஆர். அத்தனை திறமைகளைக் கொண்டவர்காளிமுத்து.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் காளிமுத்து 1977-ம் ஆண்டு முதல் 87-ம் ஆண்டு வரை அமைச்சர் பொறுப்புவகித்துள்ளார். பல்வேறு துறைகளை அவர் வகித்து வந்தார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக சில காலம் திமுகவில் இருந்தார்.அதன் பின்னர் திமுக தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் ஜெயலலிதாவுடன்சேர்ந்தார். நாவலர் நெடுஞ்செழியனுக்குப் பிறகு ஜெயலலிதாவின் அதீத அன்பைப் பெற்ற தலைவர் காளிமுத்துமட்டுமே. நெடுஞ்செழியன் மறைவுக்குப் பிறகு அவைத் தலைவர் பதவி கொடுத்து காளிமுத்துவைக்கெளரவப்படுத்தினார் ஜெயலலிதா.
மீனாட்சி சொல்லாட்சி புரியும் மதுரையிலிருந்து மற்றுமொரு சபாநாயகர் என்பதோடு, சிறந்த நாவன்மை மிக்ககாளிமுத்து சபாநாயகர் பதவியை அலங்கரிக்கப் போவதால் தமிழக சட்டசபைக் கூட்டம் களை கட்டும் என்றுநம்பலாம்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications