சபாநாயகர் சேம்பரில் பதவியேற்ற கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சபாநாயகர் சேம்பருக்குச் சென்று எம்.எல்.ஏவாகப் பதவி ஏற்றுக் கொண்டார் முன்னாள் முதல்வர்மு.கருணாநிதி.

தமிழக சட்டசபையில் புதிய எம்.எல்.ஏக்கள் 22ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். முன்னாள் முதல்வரும், திமுகதலைவருமான மு.கருணாநிதி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தர். வேறொரு நாளில் அவர்பதவியேற்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை திடீரென சபாநாயகர் அறைக்கு கருணாநிதி வந்தார். அங்கு எம்.எல்.ஏவாகபதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் எம்.அப்துல் லத்தீப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

பதவியேற்புக்குப் பின் வெளியில் வந்த கருணாநிதியிடம், சட்டசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வீர்களா,மாட்டீர்களா என்று கேட்டதற்கு, தேவைப்பட்டால் கலந்து கொள்வேன் என்றார். பின்னர், திமுகவின் நடவடிக்கைசட்டசபையில் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, திமுக ஸ்டைலில் இருக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+