"மதுரையும், சபாநாயகர்களும்"
சென்னை:
சபாநாயகர்களைத் தரும் மாவட்டமாக மாறி விட்டது மதுரை.
மதுரை மாவட்டத்திலிருந்து மற்றுமொறு சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் 12-வது சட்டசபைசபாநாயகராக டாக்டர் கா.காளிமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மாவட்டத்திலிருந்துதேர்ந்தெடுக்கப்படும் நான்காவது சபாநாயகர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1989ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது டாக்டர் தமிழ்க்குடிமகன் சபாநாயகராகபதவியேற்றார். மதுரை யாதவர் கல்லூரி முதல்வராக இருந்த தமிழ்க்குடிமகன் சிறந்த தமிழறிஞர். சபாநாயகராகஇருந்து பின்னர் அமைச்சர் பதவியை வகித்தவர்.
1991 தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்தித்தது. ராஜீவ் காந்தி படுகொலை காரணமாக ஏற்பட்ட அலையால்அதிமுக அமோக வெற்றியைப் பெற்றது. ஜெயலலிதா முதல்வரானார். அவரது ஆட்சிக்காலத்தில் சபாநாயகர்பதவியை சேடப்பட்டி முத்தையா சபாநாயகராக பதவி வகித்தார். இவர் மதுரை மாவட்டம் சேடப்பட்டி என்றஊரைச் சேர்ந்தவர். சபாநாயகர் பதவியில் இருந்த சேடப்பட்ட முத்தையா பலவித சர்ச்சைகளுக்கு உட்பட்டார்.
1996 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்த முறை ஜெயலலிதாவுக்கு எதிராக ஊழல் அலைஅடித்ததால் திமுக கரை சேர்ந்தது. மதுரையைச் சேர்ந்த, பாரம்பரியம் மிக்க நீதிக் கட்சித் தலைவர் பி.டி.ராஜனின்புதல்வர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சபாநாயகர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டர். பக்தி மான் ஆன பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனுக்கு சபாநாயகர் பதவி திணிக்கப்பட்டது என்றுதான் கூற வேண்டும். ஆனால் திறம்பட சபையைநடத்தி அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றார் பி.டி.ஆர்.
2001ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியைப்பிடித்துள்ளார். சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளரான கா.காளிமுத்துசபாநாயகராகப் பதவியேற்கவுள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதியின் அன்பைப் பெற்றவர். முன்புதிமுகவில் இருந்தார். அதிமுக பிறந்தபோது அதில் ஐக்கியமானார். தற்போது ஜெயலலிதாவின் அன்புக்குப்பாத்திரமானவர். அவருக்கு அறிக்கைகள் எழுதித் தருகிறார் என்று கூட ஒரு பேச்சு உண்டு.
முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த மதுரையிலிருந்து மேலும் ஒரு சபாநாயகர் வந்துள்ளார். பைந்தமிழால்சபையை எழிலுறச் செய்வார் என்று நம்புவோம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications