ஜெ. முதல்வரானதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதை எதிர்த்து டெல்லிஉச்சநீதிமன்றத்தில் பொதுநலன் கருதி 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
வழக்கறிஞர்கள் கபூர் மற்றும் மனோகர் லால் சர்மா ஆகியோர் இந்த வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருப்பதாவது:
எம்.எல்.ஏவாகப் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்படாத ஒருவர் எப்படி முதலமைச்சராக முடியும்?எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டது சட்டப்படி,தவறானதாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எம். எல்.ஏவாக இல்லாத ஒருவர் முதலமைச்சராவதற்கு இடமுள்ளதா?
சட்டப்படி, ஒரு அரசு ஊழியர், வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றிருந்தால் அவர் தனது பதவியைத் தொடரமுடியாது. ஆனால் ஜெயலலிதாவை மட்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்க அனுமதி அளித்தது எப்படி? என்றுகூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற கோடைவிடுமுறைக்கு முன் இந்த வழக்கு மீதான விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.
இதே போல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதை எதிர்த்துவழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டபோது, முறைப்படி, விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரைபொறுத்திருங்கள் என்றார்.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications