ராஜஸ்தானை உலுக்கும் வறட்சி
சித்தோர்கர்:
ராஜஸ்தானில் இந்த ஆண்டு கடும் வெயிலால் ஏற்பட்டுள்ள வறட்சியைப் போக்குவதற்காக, கிடைத்த வேலைக்குச்செல்கின்றனர் அம்மாநிலப் பெண்கள்.
முக்கியமாக, சித்தோர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு விவசாயம்தான் தெரிந்த ஒரே தொழில். வறட்சியால்விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை வந்தால், வெறுமனே சும்மா இருப்பார்களே ஒழிய, வேறு எந்த வேலைக்கும்போக மாட்டார்கள். பரம்பரை பரம்பரையாக இப்படித்தான் நடந்து வருகிறது.
ஆனால் இந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் வாழ்க்கையில் எந்தக் கஷ்டம் வந்தாலும், அதை எதிர் கொள்ளத் தயாராகஇருப்பார்களாம்.
மாநில அரசு நடத்தி வரும் பல கட்டுமானப் பணிகளில் பெண்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். 40தொழிலாளர்கள் ஒரு இடத்தில் வேலை பார்க்கிறார்கள் என்றால், அதில் 34 பெண்கள் இருப்பார்கள்.
ஒரு நாளைக்கு 60 ரூபாய் இவர்களுக்குச் சம்பளம் கிடைக்கிறது. அதுவும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறைதான்அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. கொடுமை என்னவென்றால், இவர்கள் வேலை செய்யும் இடத்தில் அவ்வளவுஎளிதில் தண்ணீர் கிடைக்காது.
தண்ணீர் தாகத்தைத் தணிப்பதற்காக மட்டும் 5 முதல் 7 கிலோமீட்டர் தூரம் அவர்கள் நடந்து செல்லவேண்டியிருக்கிறது. இம்மாவட்டத்தில் உள்ள 2,415 கிராமங்களும் கடுமையான வறட்சியால்பாதிக்கப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications