ரயில் கொள்ளையர்களை கண்டதும் சுட உத்தரவு
சேலம்:
ரயில் பயணிகளின் உடமைகளுக்கும், உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் கொள்ளையர்களை கண்டதும் சுட்டுக்கொல்ல ஐ.ஜி.,திலகவதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணிகளிடம் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக்கொள்ளையையடுத்து சேலத்தில் புதனன்று இரவு மீண்டும் கொள்ளை முயற்சி நடந்தது. காட்பாடியிலிருந்துஈரோட்டிற்கு வந்து கொண்டிருந்த ரயில், சேலம் அருகே வந்தது.
அப்போது அங்கு சிக்னல் உடைக்கப்பட்டிருந்ததால், ரயில் அந்த இடத்திலேயே நின்று விட்டது. சுமார் 20நிமிடங்களுக்குப் பிறகு ரயிலின் டிரைவர் சிக்னல் கிடைக்காததால் அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டு அருகில்இருந்த ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார்.
போலீசார் மற்றும் பலர் அந்த சிக்னலுக்கு வந்து சோதனையிட்டனர். அப்போது மஞ்சள் மற்றும் பச்சை விளக்குகள்உடைக்கப்பட்டிருந்தது. இந்த விளக்குகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இந்த குறிப்பிட்ட ரயிலில் உள்ள பெட்டிகளில் பயணிகள் இல்லாமல் காலியாக இருந்ததால், கொள்ளையர்களின்முயற்சி தோல்வியடைந்தது. எனவே, இதையடுத்து வந்த சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி, எக்ஸ்பிரஸ் மற்றும் சிலரயில்கள் கொள்ளையிலிருந்து தப்பின.
இந்நிலையில், சேலத்தில் ரயில் கொள்ளை குறித்து விசாரணை நடத்த முகாமிட்டுள்ள ஐ.ஜி,திலவதி நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ரயிலில் கொள்ளையடிக்கும் கும்பலைப் பிடிக்க தேவையான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.பயணிகளின் உயிருக்கும் உடமைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் கொள்ளையர்களைக் கண்டால்,உடனடியாகச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டுள்ளேன். அனைத்து ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய ரயில்வே போலீசார்சென்று வருவர்.
பிஸ்கட்டுகளைக் கொடுத்து மயக்கி கொள்ளையில் ஈடுபட்டு பயணிகளிடம் கொள்ளையடித்த கும்பலை நாங்கள்பிடித்துள்ளோம். விரைவில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களையும் பிடிப்போம் என்றார் ஐ.ஜி திலகவதி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications