சேலம் ரயிலில் கொள்ளையடிக்க முயற்சி
சேலம்:
காட்பாடி, ஜோலார்பேட்டையைத் தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை சேலம் அருகே சிக்னலை உடைத்து ரயில்பயணிகளிடம் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.
முதலில் பயணிகள் இல்லாத ரயில் வந்ததால் கொள்ளையர்களின் கொள்ளை முயற்சி தவிடு பொடியானது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணிகளிடம் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச்சென்றனர். இந்தக் கொள்ளையையடுத்து சேலத்தில் புதன் கிழமை இரவு மீண்டும் கொள்ளை முயற்சி நடந்தது.காட்பாடியிலிருந்து ஈரோட்டிற்கு வந்து கொண்டிருந்த ரயில், சேலம் அருகே வந்தது.
அப்போது அங்கு சிக்னல் உடைக்கப்பட்டிருந்ததால், ரயில் அந்த இடத்திலேயே நின்று விட்டது. சுமார் 20நிமிடங்களுக்குப் பிறகு ரயிலின் டிரைவர் சிக்னல் கிடைக்காததால் அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டு அருகில்இருந்த ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார்.
போலீசார் மற்றும் பலர் அந்த சிக்னலுக்கு வந்து சோதனையிட்டனர். அப்போது மஞ்சள் மற்றும் பச்சை விளக்குகள்உடைக்கப்பட்டிருந்தது. இந்த விளக்குகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இந்த குறிப்பிட்ட ரயிலில் உள்ள பெட்டிகளில் பயணிகள் இல்லாமல் காலியாக இருந்ததால், கொள்ளையர்களின்முயற்சி தோல்வியடைந்தது. எனவே, இதையடுத்து வந்த சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி, எக்ஸ்பிரஸ் மற்றும் சிலரயில்கள் கொள்ளையிலிருந்து தப்பின.
கண்டதும் சுட உத்தரவு:
இந்நிலையில், சேலத்தில் ரயில் கொள்ளை குறித்து விசாரணை நடத்த முகாமிட்டுள்ள ஐ.ஜி,திலவதி நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ரயிலில் கொள்ளையடிக்கும் கும்பலைப் பிடிக்க தேவையான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.பயணிகளின் உயிருக்கும் உடமைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் கொள்ளையர்களைக் கண்டால்,உடனடியாகச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டுள்ளேன். அனைத்து ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய ரயில்வே போலீசார்சென்று வருவர்.
பிஸ்கட்டுகளைக் கொடுத்து மயக்கி கொள்ளையில் ஈடுபட்டு பயணிகளிடம் கொள்ளையடித்த கும்பலை நாங்கள்பிடித்துள்ளோம். விரைவில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களையும் பிடிப்போம் என்றார் ஐ.ஜி திலகவதி.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications