பொருளாதாரத்தை சீர்குலைத்தது திமுக அரசு .. ஜெ.
சென்னை:
கடந்த முறை அதிமுக ஆட்சியிலிருந்து விலகியபோது வைத்திருந்த பணத்தை நாசமாக்கி, பொருாளாதாரத்தைசீர்குலைத்து விட்டது திமுக அரசு என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், 1996ம்ஆண்டு அதிமுக அரசு பதவியிலிருந்து இறங்கியபோது, ரூ. 874 கோடி, ரொக்கப் பணத்தை விட்டு விட்டுச்சென்றது.
ஆனால் அதற்குப் பிறகு வந்த திமுக அரசு இந்தப் பணத்தை நாசமாக்கி, பொருாளாதார நிலையை மோசமாக்கிவிட்டது. அதிமுக அரசு போனபோது, பொருளாதார நிலை நல்ல நிலையில் இருந்தது. ஆனால் திமுகஅரசுக்காலத்தின்போது இது படு மோசமாகியுள்ளது.
திமுக அரசு பதவியிறங்கியபோது அரிசி மட்டும் ரூ. 1000 கோடிக்கு கையிருப்பில் இருந்ததாக முன்னாள்முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது தவறான தகவல்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில்பெண் சிசுக் கொலை வெகுவாக குறைந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்இந்த திட்டம் முற்றிலும் கைகழுவப்பட்டு விட்டது. எனவே தற்போதைய ஆட்சிக்காலத்தில் மீண்டும் தொட்டில்குழந்தைத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.
ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த திட்டங்களில் பல எனது கனவுத் திட்டங்கள். வைராக்கியமாகநிறைவேற்றியாக வேண்டும் என்று நான் நினைத்திருந்த திட்டங்கள். இந்தத் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாகநிறைவேற்றப்படும் என்றார் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications