ஊழலற்ற ஆட்சி தருவோம்: பாண்டி.முதல்வர் நம்பிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியை மிகச் சிறந்த யூனியன் பிரதேசமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும்,ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்போம் என்றும் புதிய முதல்வர் ப.சண்முகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பாண்டிச்சேரியின் வளர்ச்சிக்காக புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள காங்கிரஸ் அமைச்சரவை அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ளும். பொதுமக்களுக்குத் தேவையான பல நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாடடைவதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
பாண்டிச்சேரியின் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை வளர்ச்சியடைய அனைத்து முயற்சிகளும்மேற்கொள்ளப்படும்.
பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் துறைமுகம் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்தப்பணிக்காக வெளிநாட்டிடமிருந்து நிதியுதவி பெறவும் திட்டமிட்டுள்ளோம்.
சிறு தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கவனித்துக் கொள்ளும்.கிராமப்புறங்களில் வாழும் பெண்களின் முன்னேற்றத்திற்காக கைவினைப் பொருட்கள் தொழிற்சாலைகள்நிறுவப்படும். இதனால் கிராமப்புறப் பெண்களின் வேலை வாய்ப்புக்கள் பெருகும்.
பாண்டிச்சேரியில் நிலையான, ஊழலற்ற, நேர்மையான ஆட்சியமைய எங்கள் அரசு பாடுபடும்.
ஆறு மாதங்களுக்குள் நான் பாண்டிச்சேரியில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாகத்தேர்ந்தெடுக்கப்படுவேன் என்றார் சண்முகம்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications