கொளத்தூரில் மான் பிடிக்கச் சென்ற 3 பேர் கைது
சேலம்:
கொளத்தூர் அருகே வனப் பகுதியில் மான் பிடிக்கச் சென்ற 3 பேரை அதிரடிப்படை படையினர் கைது செய்தனர்.
கொளத்தூர் வனப் பகுதியில் மான் வேட்டைக்கு கருங்கல்லூரைச் சேர்ந்த ஒரு கும்பல் காட்டுக்குள் நுழைந்தது.இந்தக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் வனப் பகுதியில் முள்ளம்பன்றி, முயல், மான் போன்ற விலங்கினங்களைவேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றினர்.
இவர்களை வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் கண்டு, அவர்களைச் சுற்றி வளைத்தனர்.இதையடுத்து அந்தக் கும்பல், தப்பியோட முயன்றது. இதில், 3 பேர் தப்பி தலைமறைவாகி விட்டனர். 3 பேர்மாட்டிக் கொண்டனர்.
கருங்கல்லூரைச் சேர்ந்த குழந்தைசாமி (40), ரங்கசாமி (35), தங்கராஜ் (23) ஆகியோரைப் போலீசார் கைதுசெய்தனர். இவர்கள் மான், முள்ளம்பன்றி இறைச்சிக்காக வேட்டையாட வந்ததாகத் தெரிவித்தனர். இந்நிலையில்குழந்தைசாமி காயத்துடன் இருந்துள்ளார்.
இவர்களை அதிரடிப்படையினர் தாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர்களைப் பிடித்தஅதிரடிப்படையினர், தப்பியோடிய குழந்தைசாமி 15 அடிப் பள்ளத்தில் விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது எனத்தெரிவித்துள்ளனர். காயமடைந்த குழந்தைசாமி மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குழந்தைசாமி தாக்கப்பட்டதாக செய்தியை அறிந்த கருங்கல்லூர் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று பொதுமக்களைக் கட்டுப்படுத்தினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications