பேரக் குழந்தைகளின் காதணி விழாவில் மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாருடைய பேரக் குழந்தைகளுக்கு திருச்சி மாவட்டம் டால்மியாபுரத்தில்காதணி விழா நடந்தது. இதில் மூப்பனார் கலந்து கொண்டார்.
மூப்பனாரின் 2 பேரக் குழந்தைகளுக்கும் டால்மியாபுரம் அருகேயுள்ள ஊட்டாத்தூர் என்ற இடத்தில் காதணி விழாநடந்தது. அங்குள்ள குலதெய்வமான செல்லியம்மன் கோவிலில் வைத்து மொட்டை அடித்த காது குத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்காக உறவினர்களுடன் மூப்பனார், சென்னையில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம்திருச்சி சென்றார்.
காதணி விழா முடிந்ததும் கார் மூலம், கீழப்பழூர் வழியாக கபிஸ்தலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.கபிஸ்தலம்தான் மூப்பனாரின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications