ப்ளஸ் 2 விடைத்தாள் நகல் பெற ஏற்பாடு
சென்னை:
ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாட விடைத்தாள்களின்நகல்களை வாங்கி சரி பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகிறது. இந்த முறை தேர்வு எழுதிய மாணவர்கள் கணிதம்,இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களின் விடைத்தாள்களை வாங்கி சரி பார்க்க வசதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் பரமசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்திருப்பதாவது:
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளுடன் பாட வாரியான மதிப்பெண்கள் பட்டியலும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குதிங்கள்கிழமை காலை 8 மணி முதல் வழங்கப்படும். தலைமை ஆசிரியர்கள் தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதன் ஜெராக்ஸ் பிரதியை பள்ளியில் இருக்கும் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என பள்ளி தலைமைஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலிருந்து தேர்வு முடிவுகளையும், பாடவாரியான மதிப்பெண்களையும்திங்கள்கிழமை காலை 10 மணிக்குள் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலைத் தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்ஆகிய 4 பாடங்களுக்கான விடைத்தாள் நகல்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவம்திங்கள்கிழமை முதல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை விநியோகிக்கப்படும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்துறையால் விற்கப்படும் விண்ணப்பம்மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ 52 கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பம் ஒன்றின் விலை ரூ 20 ஆகும்.
இந்த விண்ணப்பங்களை கீழ்கண்ட அலுவலகங்களிலிருந்து பெறலாம்.
மாவட்ட தலைநகர்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள்.
மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள்.
திருச்சி, வேலூர், கோவை, திருநெல்வேலி, மதுரை,கடலூர் ஆகிய 6 இடங்களில் இருக்கும் அரசுத் தேர்வுகள்மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகிய இடங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் இணைக்கப்பட வேண்டியவை:
ரூ 52 க்கான கட்டண ரசீது.
மற்றும் விண்ணப்பத்துடன் வழங்கப்பட்ட பெரிய காகித உறையில் சுயமுகவரியை எழுதி ரூ 50க்கான தபால்தலைஒட்டபட்டு ஒப்படைக்கப்பட வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை, விண்ணப்பம் வாங்கிய மையத்திலோ அல்லது விற்பனை மையத்திலோஒப்படைக்கலாம்.
அடுத்த மாதம் 2ம் தேதி கருவூலம் விடுமுறை என்பதால் அடுத்தமாதம் 1ம் தேதிக்குள் கட்டணத் தொகைசெலுத்தப்பட வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவங்கள் அடுத்த மாதம் 2ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் ஒப்படைக்கப்படவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வேறு எந்த வகையிலும் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications