வங்கியில் ரூ 1.5 கோடி மோசடி: 3 பேர் கைது
நாமக்கல்:
நூற்பாலை அமைப்பதாகக் கூறி வங்கியில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த 3 பேரைப் தமிழ்நாடுபுலனாய்வுத் துறை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் டி. வி. ராஜூ என்ற வரதராஜூ (47). இவர் ஒரு "ஸ்பின்னிங்மில் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டார். இந்த மில் ஆரம்பிக்க பெருமளவில் பணம் தேவைப்பட்டது.
இவரும், இவரது மனைவி உஷா (35) வும் இணைந்து வங்கியில் கடன் கேட்டனர். மேலும் இவர்கள் தங்களதுகூட்டாளியாக சீனிவாசன் என்பவரையும் சேர்த்துக் கொண்டனர்.
வரதராஜூ கடன் தொடர்பாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தை அணுகினார். அவர்களிடம், தான் ஒருஆடிட்டர் எனக் கூறி நெருங்கிப் பழகினார். நம்பிக்கைக்கு உரியவராக மாறிய பிறகு, நிலப்பத்திரம், வருமானவரிச்சான்றிதழ், இயந்திரக் கொள்முதல் ரசீது ஆகியவற்றை கொடுத்து ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றார்.
பின்னர் நடைமுறை மூலதனமாக 50 லட்சம் பெற்றார். இந்த கடன் தொகையை 96ம் ஆண்டு முதல் 99ம் ஆண்டுவரை பெற்றுள்ளார். இந்த நிலையில், அரசு அதிகாரிகளுக்கு அவர் அளித்த நிலப்பத்திரம், வருமானவரிச் சான்றிதழ்ஆகியவற்றின் மீது சந்தேகம் வந்தது. எனவே அதனை சரி பார்த்தனர். அப்போது அவை அனைத்தும்போலியானவை எனத் தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவர் மில் அமைப்பதாகக் கூறிய சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகாவில் உள்ள கத்தேரிஎன்ற இடத்திற்குச் சென்றனர். அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது அவர் வெறும் கட்டடம் மட்டுமே கட்டிவைத்திருப்பது கட்டி அதிர்ந்தனர்.
மேலும், உள்ள இருந்த 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் காணாமல் போயிருந்தன. இதனையடுத்துகடன் பெற்ற வரதராஜூ, அவரது மனைவி உஷா, பங்குதாரர் சீனிவாசன் ஆகியோர் மீது அதிகாரிகள் புகார்செய்தனர். இந்தப் புகாரையடுத்து அவர்கள் திடீரென தலைமறைவாகினர்.
பெருமளவு மோசடி என்பதால் இந்த வழக்கு தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications