பரிதி இளம்வழுதி ஜாமீனில் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:
சென்னை எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரிதி இளவழுதியை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலின்போது எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பரிதி இளம்வழுதி மற்றும்அ.தி.மு.க ஆதரவு வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கிடையே பெரும் மோதல்ஏற்பட்டது. இதுதொடர்பாக பரிதி இளம்வழுதியும், ஜான் பாண்டியனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரிதி இளம்வழுதி மீது செவ்வாய்க்கிழமை மேலும் 2 வழக்குகள்பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக அவரை கோர்ட்டில் ஆஜர் செய்வதற்காக செவ்வாய்க்கிழமை சென்னைஎழும்பூர் 14-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டார்.

காலையிலேயே அவர்கள் வந்து விட்டாலும்கூட மாலையில்தான் ஆஜராக வேண்டும் என்பதால் வேனிலேயேபரிதி வைக்கப்பட்டு இருந்தார். அவரை அணுகிய செய்தியாளர்களிடம் பரிதி பேச முற்பட்டார். அதற்கு போலீஸார்அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு பிரச்சனை ஏற்பட்டது. அப்போது அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதற்கிடையே, இவரது வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம் முன்னிலையில் புதன்கிழமைவிசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மலை.சுப்ரமணியம், பரிதி இளம்வழுதியை ஜாமீனில் விடுவதற்கு தமிழக அரசுவாங்கியிருந்த தடையை ரத்து செய்தார்.

அவர் தனது தீர்ப்பில், ஒரு குற்றவாளி தனக்கு எதிராக உள்ள சாட்சியங்களை அழிப்பது, வழக்கு முறையாகநடப்பதற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பது, தனக்கு எதிராக சாட்சி கூறுபவர்களை மிரட்டுவது போன்றசெயல்களில் ஈடுபட்டால் மட்டுமே அரசு கூறுவது போல் ஜாமீனை ரத்து செய்ய முடியும்.

பரிதி இளம்வழுதிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவில் இது போன்றகாரணங்கள் கூறப்படாத காரணத்தால் அவரக்கு ஜாமீன் வழங்குவதை ரத்து செய்ய முடியாது என்றும் பரிதிஇளம்வழுதியை விடுதலை செய்யுமாறும் கோர்ட் உத்தரவிடுகிறது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+