த.மா.கா. ஜனநாயக பேரவை எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை எம்.எல்.ஏ. ரங்கநாதன் புதன்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டார்.
தமிழ் மாநில காங்கிரசலிருந்து பிரிந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தமிழ் மாநில ஜனநாயக பேரவைஎன்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் இந்த கட்சிதி.மு.க.ஆதரவுடன் போட்டியிட்டது.
இந்தக் கட்சியின் சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிடடு வெற்றி பெற்றவர் ரங்கநாதன்.
பெரம்பூர் அருகே ஜவஹர் நகரில் எம்.எல்.ஏ ரங்கநாதனுக்குச் சொந்தமான சென்னை ராயல் கிளப் என்றபொழுதுபோக்கு கிளப் உள்ளது. அங்கு சூதாட்ட கிளப், மற்றும் பாரும் உள்ளது
அந்த இடத்தில் சோதனை நடத்திய போலீசார் கிளப்பின் துணை செயலாளர் தாமஸ் செல்வராஜ் உள்ளிட்ட 12பேரை கைது செய்துள்ளனர்.
கிளப்பின் தலைவர் எம்.எல்.ஏ. ரங்கநாதன் மற்றும் 12 பேர் மீதும் போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
போலீஸாரின் நடவடிக்கை குறித்து அறிந்த ரங்கநாதன் எழும்பூர் 5-வது மெட்ரோபாலிடன் கோர்ட்டில் ஆஜராகிதன்னை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு மனுச் செய்தார். மனுவை ஏற்ற நீதிபதி ரங்கநாதனை ஜாமீனில் விடுதலைசெய்ய உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட 12 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை போலீசார் ரங்கநாதனை கைது செய்தனர். கீழ்ப்பாக்கத்தில் இருக்கும்ரத்தினவேல் என்பவர் தன்னை கொலை செய்ய ரங்கநாதன் முயற்சிப்பதாக கொடுத்த வழக்கின் பேரில் இவரைபோலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் தேர்தல் நிதி வசூலிப்பதற்காக ரத்தினத்தை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ரத்தினவேல் கூறிய புகாரின் பேரில் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்என்றனர். ரங்கநாதன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசார் ரங்கநாதனை 14வது குற்றவியல் மாஜிஸ்திரேட முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றகாவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன் பேரில் ரங்கநாதன் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications