ஜூலை மாதம் வாஜ்பாய்-முஷாரப் பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்பர்வேஸ் முஷாரப் ஜுலை மாதம் முதல் வாரம் டெல்லி வரவிருக்கிறார்.

காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த இந்தியா வருமாறு பாகிஸ்தானின்ராணுவ ஆட்சியாளரப் பர்வேஸ் முஷாரப்புக்கு பிரதமர் வாஜ்பாய் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை முஷாரப் ஏற்றுக் கொண்டார். பேச்சு வார்த்தைக்கான தேதிகள் முடிவு செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் முஷாரப் கூறுகையில், வாஜ்பாய் அழைப்பை ஏற்றுபேச்சுவார்த்தைக்காக டெல்லி செல்லவிருக்கிறேன். பேச்சுவார்த்தை ஜுன் மாதம் இறுதியிலோ அல்லது ஜுலைமாதம் முதல் வாரத்திலோ நடைபெறும் என கூறினார்.

ஆனாலும் பேச்சுவார்த்தை ஜுலை மாதம் முதல்வாரத்தில் தான் இருக்கும். ஏனென்றால் வாஜ்பாய் அடுத்த மாதம்7ம் தேதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருக்கிறார்.

அதன் பின் அவருக்கு 4 வாரம் ஓய்வு தேவைப்படும். அதனால் ஜுலை மாதம் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தைநடக்கும் என நம்பத்தகுந்த வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+