வாஜ்பாய்க்கு சல்யூட் அடிக்க மறுத்த முஷாரப்!
டெல்லி:
இந்தியா வரும் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபுக்கு சிறப்பான வரவேற்பு ஏதும்அளிக்கப்பட மாட்டாது எனத் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர்களுக்கு இந்தியா எப்போதுமே அதிகமான மரியாதை தந்ததில்லை. இதற்குமுன் இந்தியா வந்த ஜியா-உல்-ஹக் உள்ளிட்ட ராணுவ ஆட்சியாளர்களுக்கு இந்தியாவில் மிகச் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டதில்லை.
ஒரு நாட்டின் அதிபர் அரசு சார்பாக வந்தால் என்ன மரியாதை வழங்கப்படுமோ அதை மட்டுமே இவர்களுக்குஇந்தியா அளித்து வந்தது. அதிகப்படியான, வரலாற்றுச் சிறப்பு மிக்க வரவேற்பெல்லாம் இவர்களுக்குஅளிக்கப்பட்டதில்லை.
முஷாரப் விஷயத்திலும் அதே போல வரைமுறைக்குட்பட்ட வரவேற்பு மட்டுமே அவருக்கு வழங்கப்படும் எனத்தெரிகிறது. ஹக் மூன்று முறை இந்தியா வந்தார். அப்போது அவருக்கு அபீஷியல் விசிட் என்பதற்கு உரியமரியாதை மட்டும் தான் தரப்பட்டது.
அவரை பிரதமர் போய் வரவேற்பது, ராஷ்ட்ரபதி மாளிகையில் ராணுவ அணி வகுப்பு தருவது, பீரங்கிகள் முழங்கவரவேற்பது போன்றவை எல்லாம் செய்யப்படவில்லை.
அதே மரியாதை தான் முஷாரபுக்கும் வழங்கப்படும் என்று தெரிகிறது. ஷெரீப் அந் நாட்டில் பிரதமராகஇருந்தபோது அவருக்கே தெரியாமல் கார்கிலில் பாகிஸ்தான் ராணுவத்தை ஊடுருவச் செய்து அந்தப் போரைமுன்னின்று நடத்தியவர் முஷாரப் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவம், ஆப்கன் தீவிரவாதிகளின்கார்கில் தாக்குதலில் 500 இந்திய வீரர்கள் இறந்தனர்.
அந் நிலையில் முஷாரபுக்கு மரியாதை தரச் சொல்லி இந்திய ராணுவத்தை அரசு நிர்பந்தித்தால் அதற்கு கடும்எதிர்ப்பு கிளம்பும் எனத் தெரிகிறது.
வாஜ்பாயை புறக்கணித்த முஷாரப்:
1999ம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானுக்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பஸ் மூலம் சென்றபோது அவருக்குவாஹ் எல்லையில் மிகச் சிறப்பான ராணுவ மரியாதை கொடுத்தார் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்.
ஆனால், அந்த நிகழ்ச்சியை அப்போது ராணுவத் தளபதியாக இருந்த முஷாரப் புறக்கணித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தியப் பிரதமருக்கு சல்யூட் அடிக்க நான் தயாராக இல்லை என்று கூறி அந்த நிகழ்ச்சியைமுஷாரப் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications