வாலிபரை மரண படுக்கையில் தள்ளிய இந்திராவின் மரணம்
திருவனந்தபுரம்:
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொலை செய்யப்பட்ட விஷயத்தைக் கேள்விப்பட்ட வாலிபர்ஒருவர் அதிர்ச்சி தாங்க முடியாமல் பக்க வாத நோயில் விழுந்து 16 வருடங்களாக பரிதவித்து வருகிறார்.
அவர் பெயர் சதாசிவன். வயது 39.
கேரள மாநிலம் கோட்டயத்தில் வசித்து வரும் இவர் அங்கு பீடி விற்பனை செய்யும் கடை வைத்து பிழைப்பு நடத்திவந்தார்.
1984 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ம் தேதி இவர் தனது கடையில் வேலை செய்து கொண்டிருந்த போதுஅப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.
செய்தி பரவியதும் கோட்டயம் தெருக்களில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆங்காங்கே தெருக்களில்நின்று கொண்டிருந்த மக்களும் தங்கள் வீடுகளை நோக்கிச் சிதறி ஓடினர்.
விஷயம் என்னவென்று தெரியாத சதாசிவத்துக்கு, இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று செய்தி தெரியவந்தது.
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட விஷயத்தை கிரகித்துக் கொள்ள முடியாத சதாசிவத்தால் பேசக்கூடமுடியவில்லை. இந்திரா காந்தி கொல்லப்பட்ட விஷயத்தைக் கேள்விப்பட்ட நாள் முதல் இந்நாள் வரை அவர் ஒருவார்த்தை கூட பேசவில்லை.
மயங்கி விழுந்த அவரை முதலில் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர்திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து 9நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு மூளை செயல்படாத நிலை ஏற்பட்டதால் அவர் இறந்து விடுவார் என்று டாக்டர்கள் கைவிரித்தனர்.அப்போது அவரது வலது காலும் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டது.
இதையடுத்து இடது காலில் பக்கவாதம் ஏற்பட்டது. ஏறத்தாழ 16 வருடங்களாக இந்தப் பக்கவாத நோயிலிருந்துஅவரால் விடுபட முடியவில்லை. அவரால் எந்த வேலையும் செய்ய முடியாத படி படுத்த படுக்கையாகி விட்டார்.
இதையடுத்து அவரது மனைவி இந்திரா குடும்பத்தை தனி ஆளாக நின்று கவனித்து வருகிறார். கோட்டயத்தில்உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.
தன்னிடம் உள்ள வீடு மற்றும் நிலத்தை விற்று தங்களது 3 மகள்களில் 2 மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார் சதாசிவனின் மனைவி இந்திரா. சதாசிவனுக்குத் தேவையான மருத்துவ வசதியையும் அவரே செய்துவருகிறார்.
இதுகுறித்து இந்திரா கூறுகையில், 1984 ல் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன் அவர் படுத்த படுக்கையாகிவிட்டார். அதன்பிறகு 1991 ம் ஆண்டு ராஜீவ் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அவரிடம் தெரிவித்த போதுகதறி அழுதார் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications