ஜெ. படத்தை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம்
திருப்பூர்:
ஜெயலலிதா படத்தை பேரூராட்சி அலுவலகத்தில் மாட்ட எதிர்ப்புத் தெரிவித்து பதவியை உதறிய பேரூராட்சித் தலைவர்,இப்போது போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளார்.
ஒரு வாரத்துக்குள் ஜெயலலிதா படத்தை அகற்றாவிட்டால், மக்களைத் திரட்டி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவேன் எனஅவர் எச்சரித்துள்ளார்.
திருப்பூர் அருகே உள்ள வேலம்பாளையம் பேரூராட்சியின் தலைவராக இருந்து வந்தவர் பெரியசாமி. இவர் திமுகவைச்சேர்ந்தவர். லஞ்ச ஊழலை எதிர்த்து ஒரு இயக்கம் நடத்தி வருபவர்.
திமுக ஆட்சியில் இருந்தவரை இவரது அலுவலகத்தில் முதல்வராக இருந்த கருணாநிதியின் படம் மாட்டப்பட்டிருந்தது. இப்போதுஅதிமுக ஆட்சி வந்தவுடன் அதிமுகவினர் சிலர் பேரூராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து ஜெ.படத்தை மாட்டினர்.
இதற்கு அவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், ஜெயலலிதா படத்தை அகற்ற முடியாது என அதிமுகவினர் பிடிவாதமாகஇருந்ததால், ஊழலில் திளைத்த ஜெ.வின் படத்திற்கு கீழ் அமர்ந்து வேலை செய்ய மாட்டேன். ஜெ. படம் மாட்டியதைக் கண்டித்துபேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினமா செய்கிறேன் எனக் கூறி பதவியை ராஜினமா செய்தார்.
இப்போது பேரூராட்சி அலுவலகத்திற்குள் வைக்கப்பட்ட படத்தை அகற்றாவிட்டால், பொதுமக்களை திரட்டி போராட்டம்நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பெரியசாமி மாவட்ட கலெக்டர் சந்தானத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்கூறியுள்ளதாவது:
பேரூராட்சி மன்றத்திற்குத் தொடர்பில்லாத அதிமுகவினர் அத்து மீறி அலுவலகத்திற்குள் நுழைந்து ஜெயலலிதா படத்தைமாட்டியுள்ளனர். இரட்டை விரலைக் காட்டும் படம் இரட்டை இலையுடன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தைஅகற்ற வேண்டும்.
இப்படத்தை அலுவலகத்தில் வைத்த அதிமுகவினர் செயல் அலுவலருடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இப்படத்தை இன்னும் ஒரு வார காலத்திற்குள் அகற்றாவிட்டால், பொதுமக்கள் ஆதரவுடன் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்போன்றவற்றில் ஈடுபடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications