திமுக, அதிமுகவுக்கு மாற்றாக செயல்படுவோம்: வைகோ
தஞ்சாவூர்:
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாங்கள் செயல்படுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோதெரிவித்தார்.
தஞ்சையில் 29 மற்றும் 30 தேதிகளில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகுவைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிமுகவோ ஊழலின் ஊற்றாகத் திகழ்கிறது. திமுகவோ வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் சக்தியாக மாறி விட்டது.
இதனால் தமிழக மக்களின் வாழ்வு செழிக்கவும், மகிழ்வும், அச்சமுமற்ற அமைதி உருவாகவும் மதிமுக பாடுபடும்.
அதாவது தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாங்கள் செயல்படுவோம் என பொதுக்குழுக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் அதிமுக அரசு, திமுகவினரைக் கைது செய்து வருவது பழிவாங்கும் நடவடிக்கையா என்றுகூற முடியாது. ஏனெனில் இந்த வழக்குகளில் முழு உண்மை தெரியாமல் நாங்கள் எதுவும் கருத்து கூற முடியாது.
நான் மத்திய அமைச்சரவையில் சேரப்போவதாக பல பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியிருந்தது. 1998 ம்ஆண்டு வாஜ்பாய் அழைத்தபோதே நான் பதவியில் சேர முடியாது என மறுத்தேன். அந்த நிலையில் மாற்றம்இல்லை.
ஜூன் 2 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து கட்சியில் இணைந்துள்ள இளைஞர்களுக்காக கருத்தரங்கம், பயிற்சி பாசறைகள் ஜூலை 31 ம் தேதிவரை நடைபெறும் என்றார் வைகோ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications