வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்து விவரம் சேகரிப்பு
சேலம்:
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட பல அமைச்சர்கள் மற்றும் திமுகவினரின் சொத்து விவரம் சிஐடிபோலீஸாரால் ஆதாரபூர்வமாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்றவுடன் திமுக ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள், அளவுக்குஅதிகமாக சொத்து சேர்த்தவர்கள், பினாமிகள் பெயரில் சொத்துக்களை பாதுகாத்து வைத்துள்ளவர்கள் பற்றியதகவல்களைத் திரட்ட சிஐடி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் சிஐடி போலீஸார் திமுக விஐபிக்களின் சொத்து விவரத்தை சேகரித்து வருகிறார்கள்.ஆதாரபூர்வமான வகையில் சிஐடி போலீஸாரால் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
கடந்த 1989 ம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதாவை தாக்க முயன்ற காரணத்தாலும், ஜெயலலிதாவை கடுமையாகவிமர்சித்து வந்ததாலும் பரிதி இளம்வழுதியை கைது செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த பட்டியலில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட மேலும் பலர் உள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீஸார்மட்டுமின்றி வீரபாண்டி ஆறுமுகத்தின் முழு சொத்து விவரம், பினாமிகள் விவரம், சொத்துக்களை பராமரிப்பதுயார்? எந்த வகையில் பணம் செலவழிக்கப்படுகிறது? என்பது உள்பட அவரது அனைத்து நடவடிக்கைகளையும்கவனித்து வருகிறார்கள்.
இதுதவிர ஏற்காட்டில் சொத்து வாங்கிக் குவித்தது தொடர்பாகவும் வீரபாண்டி ஆறுமுகத்திடம் போலீஸார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை விட அதிக அளவில் சொத்துசேர்த்த திமுகவினரின் விபரம் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.
திமுகவினரின் சொத்து விவரம் பற்றி சிறிது தெரிய வந்தாலும் அதை அலட்சியப்படுத்தாமல் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களின் சொத்துக்கள் பற்றி முழுவிவரமும் சேகரிக்கப்படுவதால் திமுக பிரமுகர்கள் கிலியில் உள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications