கடத்தலுக்கு உதவிய சுங்கத்துறை அதிகாரி கைது
டெல்லி:
சீனாவிலுள்ள பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வர முயன்ற ஆப்கான் மற்றும் உஸ்பெக் நாட்டைச்சேர்ந்தவர்களுக்கு உதவியது தொடர்பாக சுங்க இலாகாத்துறை இன்ஸ்பெக்டர் ஒருவரை சிபிஐ அதிகாரிகள்வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
டெல்லி விமானநிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது இன்ஸ்பெக்டர் டி.ஆர்.கே.ரெட்டி,கடத்தல் தொழிலில் ஈடுபடுவோருக்கு உதவி செய்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது. இவர் ஏற்கனவேகடத்தல்காரர்களுக்கு உதவி செய்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.
உஸ்பெஸ்கிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவரும், ஆப்கானைச் சேர்ந்த நபர் ஒருவரும் சீனாவிலுள்ளபட்டுப்புடவைகள் உள்பட பல பொருட்களை இந்தியாவுக்குக் கடத்த முயன்றதற்கு உதவியது தொடர்பாக இவர்கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ரெட்டியின் வீட்டிலிருந்து, புகைப்படங்கள் உள்பட பல ஆவணங்களைப் சிபிஐஅதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சிபிஐ செய்தித்தொடர்பாளர் எஸ்.எம்.கான் கூறுகையில், ரெட்டி கடத்தல்காரர்களுக்கு பல விதங்களில் உதவிபுரிந்திருக்கிறார் என்று எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில்தான் அவரைக் கைதுசெய்துள்ளோம் என்றார்.
முன்னதாக சுங்க இலாகா சூப்ரிடென்டன்ட் சுதிர் சர்மா, இன்ஸ்பெக்டர்கள் ஆர்.ஸூட்ஷி, வி.கே.கருணா ஆகியோர்வெளிநாட்டு கடத்தல்காரர்களுக்கு உதவியது தொடர்பாக கடந்த மே மாதம் 22 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டு கடத்தல்காரர்களுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் உதவி புரிகிறார்கள் என்று சிபிஐக்கு ரகசியத் தகவல்கிடைத்தது முதல் இதுவரை 48 க்கும் மேற்பட்ட சுங்க இலாகா அதிகாரிகளின் வீட்டை சிபிஐ அதிகாரிகள்பரிசோதனை நடத்தி விட்டனர்.
இதுதொடர்பாக, சுங்க இலாகாவில் பணிபுரியும் துணை போலீஸ் கமிஷனர், இணை கமிஷனர் மற்றும் கூடுதல்கமிஷனர் வீடுகளில் சோதனை நடந்தது.
சிபிஐ விசாரணையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த டெல் ஆக்ஹா, மமூர் கான் ஆகியோரும்,உஸ்பெஸ்கிஸ்தானைச் சேர்ந்த பல பெண்கள் சீனாவிலிருந்து பட்டுப்புடவைகள் உள்பட ஏராளமான பொருட்களைஇந்தியாவுக்குக் கடத்தி வந்தனர் என்றும், அதற்கு இந்திய சுங்க இலாகா அதிகாரிகள் உதவி செய்து வந்தார்கள்என்றும் தெரிய வந்தது.
உஸ்பெஸ்கிஸ்தானைச் சேர்ந்த பெண் சுங்க இலாகா அதிகாரிகளை ஏமாற்றி விட்டு சுமார் 68 முறை கடத்தல்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
இவர்கள் தாங்கள் கடத்தும் பொருட்களுக்கு பெரிய பாக்கெட்டுக்கு 700 முதல் 800 டாலர்களும், சிறியபாக்கெட்டுகளுக்கு 400 டாலர்கள் என்ற அடிப்படையில் சுங்கத்துறையினருக்கு லஞ்சம் கொடுத்து வந்தனர் என்றும்தெரிய வந்தது.
சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், இன்னும் பல சுங்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளோம்.அப்போது இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications