இந்தியாவில் மின்சார கார்
டெல்லி:
உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 ம் தேதி இந்தியாவின் முதல் மின்சாரக் கார் ரேவா சாலைகளில் வலம் வரஉள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரேவா கார் பேட்டரி மூலம் இயங்கும் ஆற்றல் பெற்றது. இதனால் இந்தக் கார்கள்சாலைகளில் செல்லும்போது மாசுக்களோ அல்லது அதிக அளவு புகையோ வெளிவராது.
இந்தக் காரின் விலை ரூ 2 லட்சத்து 50 ஆயிரம். புதிய மினி பேட்டரி கார் ரேவா குறித்து கார்கள் தயாரிக்கும்மாய்னி க்ரூப் தலைவர் சுதர்ஸன் மாய்னி கூறுகையில், விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது ரேவா கார்.
இந்தக் காரை பெங்களூரில் உள்ள ரேவா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தார் உருவாக்கியுள்ளனர். ரேவா என்றால் புதியதொடக்கம் என்று அர்த்தமாகும்.
இந்தக் காரில் இரண்டு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள் அமர்ந்து செல்ல முடியும். இந்தக் கார் பெங்களூரில்நடத்திய சோதனை ஓட்டத்தின் போது 1 மில்லியன் கிலோ மீட்டர் ஓடி சாதனை படைத்தது.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மினி பேட்டரி கார் ரேவா அதிக அளவில்புழக்கத்தில் இருக்கும் என நம்பலாம்.
இங்கிலாந்தில் 5, 000 பவுண்டுகளுக்கு இந்தக் கார்களை விற்பனை செய்ய அங்குள்ள பிரபல நிறுவனத்துடன்பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பேட்டரியின் உதவியுடன் ஓடும் இந்தக் கார் இயங்குவதற்கு 8 பேட்டரிகள் தேவைப்படும். 40, 000 கிலோமீட்டர்தூரம் சென்ற பின் பேட்டரிகளை மாற்ற வேண்டும். இந்தக் கார் ஓடுவதற்கு 40 வோல்ட்டுகள் மின்சாரம்தேவைப்படும். மேலும் பேட்டரியால் இயங்கக் கூடிய இந்தக் காரில் கிளச் மற்றும் கியர் எதுவும் கிடையாதுஎன்றார்.
இதுதவிர பி.எச்.ஈ.எல் நிறுவனத்தார் ஏற்கனவே ஆக்ரா, அங்குள்ள விலங்கியல் பூங்கா, பறவைகள் சரணாலயம்ஆகிய இடங்களில் மாசுக் கட்டுப்பாட்டைத் தவிர்க்கும் விதத்தில் மின்சார வேன்களை அறிமுகப்படுத்தியது.இதுவரை பி.எச்.ஈ.எல். 250 மின்சார வேன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
பரோடா, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய பெரு நகரங்களில் மின்சார வேன்களை அறிமுகப்படுத்தும்முயற்சியில் பி.எச்.ஈ.எல். ஈடுபட்டு வருகிறது.
அதே போல் மின்சார பஸ்சை அறிமுகப்படுத்துவதிலும் பி.எச்.ஈ.எல்.முனைப்புக் காட்டி வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications