மறுமணத்துக்கு முயன்று நஷ்ட ஈடு கொடுத்த "மாப்பிள்ளை"

Subscribe to Oneindia Tamil

திமுக சட்டசபைத் தலைவர் அன்பழகன்: எப்படியோ தண்ணீர் வந்ததை ஒப்புக் கொள்கிறீர்களா? (கிருஷ்ணா நீர்தான் என அன்பழகன் வாதிடவில்லை.)

ஜெயலலிதா: தினமும் வர வேண்டிய கிருஷ்ணா நீர் ஏன் வரவில்லை. கண்டலேறு அணையிலிருந்து சொட்டுசொட்டாக நீர் வந்து என்ன பிரயோஜனம். கிருஷ்ணா நீர் வந்ததாக கருணாநிதி கூறியது மிகத் தவறான தகவல்.

இந்தத் திட்டத்தை எம்.ஜி.ஆரும், என்.டி. ராமாராவும் ஆரம்பித்தனர். இதன்படி ஸ்ரீசைலம் முதல் பூண்டி வரைகால்வாய் வெட்டப்பட வேண்டும். 4 கட்டங்களாக கால்வாய் வெட்டும் பணி நடத்த திட்டமிடப்பட்டது. இதில் 3கட்டப் பணிகள் தான் முடிந்துள்ளன.

இணைப்புக் கால்வாய் இன்னும் வெட்டப்படவேயில்லை. 35 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் வெட்ட வேண்டிய பணிபாக்கியுள்ளது. இதற்கான நிலம் கூட இன்னும் கையகப்படுத்தப்படவில்லை. நிலத்தை தர மறுத்து பலர்நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டனர். இதனால் கால்வாய் கட்டும் பணி நின்றுவிட்டது.

கிருஷ்ணா ஆற்றிலிருந்து கால்வாயே கட்டாமல் அந்த ஆற்றிலிருந்து எப்படி சென்னைக்கு நீரைக் கொண்டுவந்தீர்கள்?.

சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் வந்தது. ஸ்டாலினை மேயராக்க வேண்டும் என நினைத்தார்கள். அதற்காகசென்னையில் அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணா கால்வாயில் கண்டலேறு அணையிலிருந்து மழை நீரைத்திறந்துவிட்டு கிருஷ்ணா ஆற்றிலிருந்து நீர் வந்துவிட்டதாகக் கூறி ஏமாற்றினீர்கள்.

அதற்காக ராஜாஜி ஹாலில் ஒரு விழாவும் நடத்தி ஆந்திர முதல்வரும் கருணாநிதியும் வெள்ளிக் குடத்தில் நீரைமாற்றிக் கொண்டீர்கள்.

சட்டசபையில் கூட கிருஷ்ணா நீர் வந்துவிட்டதாக கூறினீர்கள். ஆனால், வந்தது கண்டலேறு அணையில் இருந்தமழை நீர்.

திமுகவின் துரைமுருகன்: நீங்கள் ஆந்திர முதல்வரைக் கேட்டிருவந்தால் கிருஷ்ணா நீர் வந்த விவரம்தெரிந்திருக்கும்.

கிருஷ்ணா ஆற்றில் 13 கி.மீ. தூரத்துக்கு இன்னும் கால்வாய் வெட்டப்படவில்லை என்பது உண்மை தான். (இந்தத்தகவலை திமுக ஆட்சியில் இருந்தபோது வெளியே சொன்னதே இல்லை. கிருஷ்ணா நீரை வெள்ளிக் குடத்தில்மாற்றிக் கொண்ட நிகழ்ச்சியில் கூட கருணாநிதி இந்த உண்மையை மக்களுக்குத் தெரிவிக்கவில்லை என்பதுசோகமான உண்மை.)

ஆனால் வேறு பாதையில் இருந்த ஓடை வழியாக (!) நீர் கொண்டுவரப்பட்டது.

அன்பழகன்: தண்ணீர் பிரச்சனையில் சூடு வேண்டாம்.

ஜெயலலிதா: இணைப்புக் கால்வாய் கட்டப்படவில்லை என்பதை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகனே ஒப்புக் கொண்டுவிட்டார். கால்வாய் வெட்டாமல் தண்ணீர் எப்படி வரும்?. ஸ்டாலின்மேயராற்குவதற்காக மக்களை ஏமாற்ற ஒரு மோசடி விழா நடத்தினீர்கள். வெள்ளிக் குடத்தில் கிருஷ்ணா நீரைமாற்றிக் கொண்டீர்கள். ஆனால், இப்போது தண்ணீர் வரவில்லை. ஏன் என்றால் உங்களிடம் பதில் இல்லை.

இந்த சட்டசபை விவாதம் திமுக அனுதாபிகளையே கூட அதிர்ச்சி அடையச் செய்துள்ளது தான் உண்மை.

யாரைத்தான் நம்புவதோ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+