சிறுதொழில் முதலீட்டை உயர்த்த கோரிக்கை
திருப்பூர்:
உலகமயமாக்கல் சூழ்நிலையால் ஏற்படும் சர்வதேசப் போட்டியைச் சமாளிக்க சிறுதொழில்களுக்கான முதலீட்டு உச்சவரம்பபை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும்என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடந்த ஏற்றுமதியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுமதியாளர்சங்கத்தின் சக்திவேல் கூறியதாவது:
சிறு தொழில்களுக்கான தொழில் முதலீட்டு உச்சவரம்பு இதுவரை பிறதொழில்களுக்கு ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னலாடைத் தொழிலுக்குஇது ரூ.3 கோடியாக உள்ளது.
உலமயமாக்கல் என்ற சூழ்நிலை இப்போது உருவாகி வருகிறது. இந்த சூழ்நிலையைஎதிர்த்துப்போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
எனவே, இயந்திரங்களை நவீனப் படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களையும் பெறகூடுதலாக முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
எனவே, சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க பின்னாலாடை சிறுதொழில் முதலீட்டு உச்சவரம்பை ரூ.5 கோடிக்கும் மேல் நிர்ணயிக்க வேண்டும்.
சர்வதேச சந்தையில் நமது ஏற்றுமதியாளர்கள் கடும் போட்டியைச் சமாளிக்கவேண்டியவர்களாக உள்ளனர். ஏற்றுமதியாளர் தனது உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும்மேல் ஏற்றுமதி செய்தால் அவருக்கு சில்வர் கார்டு வழங்க வேண்டும்.
இந்த சில்வர் கார்டு பெறும் ஏற்றுமதியாளருக்கு ஏற்றுமதி மண்டலத்தில் அனைத்துவசதிகளையும் செய்து தர வேண்டும். சிறு தொழில் ஏற்றுதியாளருக்கு வழங்கப்படும்சலுகைகள் தரப்பட வேண்டும். அப்போது தான் ஏற்றுமதியின் வளர்ச்சிஊக்குவிக்கப்படும்.
அடுத்து வரும் உலகமயமாக்கல் சூழ்நிலையின்போது சிறு தொழில் நிறுவனங்களின்தொழிாளர்களுக்கும் உரிமையாளரும் பயன்பெறும் வகையில் தொழிலாளர் நலச்சட்டங்கள் எளிமையாக்கப்பட வேண்டும். உலக வர்த்த அமைப்பு வர்த்தகத்தில்ஈடுபடும் நிலையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்தவேண்டும்.
மேலும், போட்டி சூழ்நிலையால், தரத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலையில் நாம்உள்ளோம். எனவே புதிய தொழில்நுட்பங்களை தைவான், ஹாங்காங், கொரியாஆகிய நாடுகளிலிருந்து தொழிலாதிபர்களுக்கு உதவ மத்திய அரசு முயற்சிக்கவேண்டும்.
திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதியாளர்கள் பொதுவான ஒரு பிராண்ட்டைஏற்படுத்தும் முயற்சியில் உள்ளனர். இவர்களுக்கு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் ரூ.5கோடி மானியம் அளிக்க வேண்டும் என்றார் சக்திவேல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications